Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

யாக்கை சிறகினிலே - நிறைவுப் பகுதி ✍️ கவிஞர் விஜயநேத்ரன்

Copied!
Kavignar Vijayanethran

யாக்கை சிறகினிலே 

நிறைவுப்பகுதி 

✍️கவிஞர் விஜயநேத்ரன் 

   " என்னாச்சு ஜானு ?" என அதிர்ச்சியுடன் கேட்ட ரகுவுக்கு ஏதுமில்லை என்பது போல் தலையசைத்தாள். இருப்பினும் ஜானகியின் கண்ணீருக்கான காரணத்தை உணர்ந்த ரகுவின் கண்கள் கலங்கத் தொடங்கியது. கலங்கிய கண்ணீருக்கு இமைகளுக்குள்ளேயே தடை போட்டான்.

" ஏய். என்னாச்சுமா??. நீ எதுக்கு இப்ப அழுறா?"என்று அவள் தலையை வருடினான்.

" கோவில்ல , சுதா அத்தை பேசுனத நினைச்சேன்." என்று விசும்பலுடன் பேசிய ஜானகிக்கு பதில் சொல்ல முடியாமல் அமைதியாய் இருந்தான் ரகு.

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை. நீ எத நினைச்சும் குழம்பாம தூங்கு மா" என்று அவளைத் தேற்றி தூங்க வைத்தாலும் சுதா சொன்ன வார்த்தைகள் அவன் செவிகளில் ஊடுருவி விழிகளில் எதிரொலித்து.

திடீரென காரின் இயக்கம் நிற்க அவன் நினைவுகள் இயல்பு நிலைக்கு திரும்பின. மெதுவாக ரகுவின் தோள்களில் ஜானகி சாய்ந்தாள். அவளுக்கு அந்த அரவணைப்பு அவசியம் தேவைப்பட்டது. அவளைத் தேற்றியவாறே நிமிர்ந்து பார்த்தான் ரகு.

" ஏன், இங்க எதுக்கு நிறுத்துன" என்று கேட்ட ரகுவின் முகத்தில் இன்னும் அந்த வார்த்தைகளின் காயம் கலையாமல் இருந்தது. 

" நமக்கு கல்யாணம் ஆகி 7 வருசம் ஆகிடுச்சுல்ல" என்று கேட்டு ரகுவின் முகத்தைப் பார்த்தாள் ஜானகி

"ம். ஆமா, அதுனால என்ன?" என்று ரகுவின் வார்த்தைகளுக்குப் பின் ஜானகி மௌனமாய் சிறிது யோசித்தாள்.

" இன்னும்... இன்னும் " என்று சொல்லி முடிப்பதற்குள் கண்களின் ஓரம் எட்டிப் பார்த்த நீர்த்துளிகள் அவளை மேலும் பேசாவிடாமல் செய்தது. 

  " அதெல்லாம் ஏதும் இல்லை. நீ எதையும் நினைக்காத " என்ற சொன்னவாறே அவளைத் தோளில் சாய்த்து ஆறுதலாய் தலையை வருடினான்.

" அவங்க சொன்ன மாதிரியே ஆயிடுச்சுல்ல. என்னால ஒரு குழந்தை பெத்து தர முடியலயே" என்று அழத் தொடங்கினாள்.

"அப்படி எல்லாம் நினைக்காத.. நடக்கும் போது எல்லாம் நடக்கும்" என்று ரகுவின் உதடுகள் வழக்கம் போல் ஆறுதலை உதிர்த்தது.

" அதுதான் டாக்டர் கூட சொல்லிட்டாங்களே" என்ற ஜானகியின் வார்த்தைகள் அவளது வலியையும் சேர்த்து உணர்த்தியது .

"டாக்டர் ஒன்னும் கடவுள் கிடையாதே. ஊர்ல ஆயிரம் பேர் ஆயிரம் சொல்வாங்க. உனக்கு நான் இருக்கேன். நீ என் கூட இருந்த போதும். எனக்கு நீதான் முக்கியம். கவலைப் படாத எல்லாம் நல்லதே நடக்கும்" என்ற ரகுவின் வார்த்தைகள் அவளைக் கொஞ்சம் தேற்றியது.

" எனக்கு ஒரு யோசனை தோனுது" என்று ஜானகி சொல்ல, என்ன என்பதுபோல் அவளைப் பார்த்தான் ரகு.

" நாம் ஏன் வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தையப் பெத்துக்க கூடாது." என்ற ஜானகியின் வார்த்தைகள் ரகுவுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

" இல்லை. அது வேணாம்" என்ற வார்த்தைகளை ரகுவின் உதடுகள் சட்டென உதிர்த்தது.

" ஏன் வேண்டாம்" என்று ஆதங்கத்துடன் கேட்டாள்.

" என்னால அப்பா ஆக முடியாதுன நீயும் இதே செய்வியா" என்ற ரகுவின் வார்த்தைகளுக்கு ஜானகியின் மௌனமே பதிலாய்க் கிடைத்தது.

" அது போலத்தான். எனக்கு ஒரு குழந்தை பிறந்த அது என்னோட குழந்தைய மட்டும் இருக்க கூடாது. நம்மோட குழந்தையா இருக்கணும்." என்று ரகு தீர்க்கமாக சொல்லி முடிக்க ஜானகி அவனை அழுத்தமாகக் கட்டிக் கொண்டாள்.

" என்னால அம்மாவாக முடியாதா??. அது கனவாகவே போய்டுமா" என்ற ஜானகியின் வார்த்தைகளுக்குப் பின் நிசப்தமாய் சில விநாடிகள் கரைந்தது. தனது அலைபேசியை எடுத்து யாரிடமோ பேசினான்.  

   ரகுவின் முகத்தைப் பார்த்த ஜானகி அவன் ஏதோ தீவிர யோசனையில் இருப்பதை உணர்ந்தாள். " என்ன ரகு.. நான் உன்ன ஹர்ட் பண்ணிட்டனா" என்ற ஜானகியின் குரல் சற்றே தழுதழுத்தது. 

    " ஏய்..சீ.. லூசு. அதெல்லாம் ஒன்னும் இல்லை. " என்ற ரகு அவளது தலையை வருடினான்.    

" அப்புறம்.. வேற என்ன யோசனை" 

" காரை நான் ட்ரைவ் பண்ணலாம்னு தோனுது " என்று சொல்லி சிரித்த ரகுவை செல்லமாக அடித்த ஜானகி " சரி" என்று தலையசைத்து இடம் மாற ரகு வண்டியை ஓட்ட ஆரம்பித்தான்.

    நீண்ட நேரம் பயணித்த அவர்களின் வண்டி கடைசியாய் ஒரு இடத்தில் வந்து நின்றது. அதுவரை அமைதியாக இருந்த ஜானகி வண்டி நின்றவுடன் அந்த இடத்தை சுற்றி பார்வையைச் சுழற்றிவளை " கீழே இறங்கு " என்றான் ரகு.‌

    " இங்க எதுக்கு " எனக் கேட்ட ஜானகியின் முகத்தில் அதிர்ச்சி அலைகள் வெளிப்பட்டது.

" உள்ள வா சொல்றேன்" என்றவாறே அவளை உள்ளே அழைத்து சென்றான். 

அதிர்ச்சியுடன் உள்ளே சென்ற அவள் கண்கள் வியப்பில் ஆழ்ந்தது. மெல்லக் குனிந்த அவளைப் பார்த்து சிரித்தது பச்சிளங்குழந்தை. அதன் பிஞ்சுவிரல்களின் தீண்டலில் மெய்மறந்தாள் ஜானகி.

" இப்போ அம்மா ஆகிட்டியா??. இந்த குழந்தைக்கு அம்மாவா இருக்க முடியும்லா" எனக் கேட்ட ரகுவைப் பார்த்த ஜானகியின் கண்கள் முதன்முறையாக ஆனந்தக் கண்ணீரை சிந்தியது. நிமிர்ந்த அவள் முகத்தை கருணை இல்லம் என்ற பெயர்ப்பலகைப் பார்த்து சிரித்தது.

" எப்படிடா??. அப்போ உன்னோட தூரத்து அண்ணனோட குழந்தைய தத்து எடுத்துக்கலானு மாமா சொன்னப்ப வேணானு சொன்ன. இப்போ??" என ஆச்சரியமாகக் கேட்டாள் ஜானகி.

" அந்தக் குழந்தைக்குனு ஒரு அடையாளம் இருக்கு. நிறைய சொந்தங்கள் இருக்கு. அதை மாத்த முடியாது. ஆனா இந்த குழந்தைக்கு இது வரை அப்படி இல்லை. நம்ம குழந்தைனு அடையாளம் கொடுக்கலாம். கடைசி வரைக்கும் " என்ற ரகுவின் பேச்சைக் கேட்ட ஜானகி குழந்தையை அள்ளி அனைத்துக் கொண்டாள்.

"ஆமா. இது நம்மோட குழந்தை" என மகிழ்ச்சியுடன் சொன்ன ஜானகியைப் பார்க்க ரகுவின் மனமும் மகிழ்ச்சியில் நிரம்பியது.சில வழக்கமான நடைமுறைகளுக்காக சில காகித கோப்புகளில் கையெழுத்திட்டு உறுதி அளித்தபின் அவர்களின் குழந்தையுடன் வீட்டிற்கு திரும்பினர்.

வரும் வழியில் "இப்போ எங்களுக்கும் ஒரு குழந்தை" என பிரபல மருத்துவமனையின் விளம்பரத்தில் ஒரு பெண் குடும்பமாய் விளம்பரத்திற்காக செயற்கையாய் சிரித்துக் கொண்டிருந்தாள்.

அதனைக் கண்ட ஜானகி குழந்தையை மார்போடு சேர்த்து அணைத்தாள். காரின் இயக்கத்தில் குழந்தை அவள் முகத்தில் முத்தமிட்டது. அந்தத் தீண்டலில் ஏழு ஆண்டுகளாய் அவள் உள்ளத்தில் சுமந்த சுமைகளும் வலிகளும் மறைந்தது. மனதின் ஏற்பட்ட மாற்றத்தால் சந்தோசச் சிறகுகள் உள்ளத்தில் முளைக்க இன்பவானில் சிறகடித்துப் பறந்தாள்..


Copied!
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

யாக்கை சிறகினிலே பகுதி 1

தேசிய நெடுஞ்சாலை ✍️ கவிஞர் விஜயநேத்ரன்

Copied!