தினமொரு திருமொழி ஆழ் மனதினைக் கேட்டு ஆள் உன் மனதினை
வீதிக்கு ஆயிரமாய் விமர்சனங்கள் கிடைப்பதுண்டு,
பாதிக்கு மேலதிலே பகல்வேடமிடுவதுண்டு.
பார்த்ததும் நல்வேஷம் , பாராது துவேஷம் ,
கொடுத்தால் கொண்டாடும், விடுத்தால் வசைபாடும்...
விதியென்று சொல்லுமொரு கூட்டம் - எதிராய்
சதிவலை பின்னுமொரு கூட்டம்
தேனொழுகப் பேசுமொரு கூட்டம் - உள்ளே
தேள்கொடுக்கு செய்திடுமே நோட்டம்.
உதட்டளவின் புகழ்ச்சியினை நீயும்,
உடனடியாய் மறந்துவிடு நாளும்...
எதிர்நின்று விமர்சனங்கள் வந்தால்
ஏற்றுக்கொள் உள்ளத்தில் நன்றாய்...
பால் நிறத்தில் கள்ளுண்டு உலகில்..
பார்வைக்கு ஒன்றாகும் மனதில்...
எதிர்மறையை எப்போதும் விடுத்து,
நேர்மறையை நெஞ்சோடு நிறுத்து..
ஆழ் மனதின் வார்த்தைகளைக் கேட்டு,
ஆள் உந்தன் மனதினை நீ கோவாய்...
நீ வளர உரமிடுவாய் இதனை...
நீக்கமற நிறைந்திருக்கும் இறையாய்..
வாழ்த்துகளுடன்,
கவிஞர் விஜயநேத்ரன்