அழிவில்லாப் பெருங்கடல் : அன்பென்னும் ஆலமரம்
ஆழிப்பெருக்கெடுத்த அன்பு,
வேலியிட்டுக் கொண்டது...
குளம் குட்டைகளாய்...
குறுகலான எல்லைக்குள்...
மனிதருக்குள்....
அடைபட்ட அன்பது,
அவ்வப்போது தடையுடைத்து,
பெருக்கெடுக்கெடுக்கிறது...
அழுத்தத்தை மீறி...
காட்டாற்று வெள்ளமாய்,
கரைகளைத் தாண்டி,
எல்லைகளின்றி,
எங்கும் நிறைகிறது...
சிறைபட்ட அன்பு,
சிறகுகளை விரித்து,
வானமே எல்லையாய்..
விஞ்ஞான உலகிதிலே
அன்பதனைத் தொலைத்தாலும்,
அவ்வப்போது மீட்டுத்தருகிறது...
இணையில்லா அன்பினை..
இயற்கை நம் கையில்..
மாற்றங்கொண்டு மாறியது
மனித மனம் மட்டுமே...
மாறாமல் இருக்கிறது...
மிருகங்களின் அன்பு...
ஆறறிவு என்று ஆணவம் பேசினாலும்,
ஐந்தறிவின் அன்பு மழையில்,
தொலைந்து தான் போகிறது நம் அன்பு...
அன்பெனும் சிறு விதையை,
அவற்றிடம் விதைத்தால்,
விருட்சமாய் திருப்பி தருகிறது...
விலையில்லா அன்பை...
ஆம்...
அன்பென்னும் ஆலமரம்,
ஆணிவேர் இழந்தாலும்,
விழுதுகளால் எழுந்து நிற்கும்...
விருட்சமாய் உயர்ந்து நிற்கும்...
வற்றாதப் பெருங்கடலாய்,
வாழ்க்கையை நமக்களிக்கும்..
வானத்தில் எல்லைவரை,
வாழ்க்கையில் சிறகடிக்கும்...
யாராய் இருந்தாலென்ன???
வேராய் இருப்பதென்னவோ...
அன்பு ஒன்றுதான்....
பாலும் தேவையில்லை...
பாஷையும் தேவையில்லை..
அகிலத்தை ஆளும் அன்பிற்கு...
அன்புடன்
உங்கள்,
கவிஞர் விஜயநேத்ரன்