இதயம் : வெற்றுச் சதையா ?? பற்றின் விதையா???
இதயமென்றால் என்ன??
உடலுக்குள் ஆயிரம்
உறுப்புகள் இருந்தாலும்,
இதயம் மட்டுமே
இமயமாய் உயர்ந்து ...
முதன்மையாய் நிற்கிறது..
ஏன் என்ற கேள்விக்கணை,
எனக்குள்ளும் பிறக்கிறது..
எல்லோரையும் போல...
வெற்றுச் சதையின்
அமைப்பா இதயம்..??
இல்லை.,
செங்குருதிக் கூட்டின்
இணைப்பா இதயம்.???
இல்லை..,
உணர்வுகள் பிறக்கும்
கருவா இதயம்???...
இதயம் என்றால் என்ன??..
வெண்சதையோடு,
செங்குருதி ஓட,
உள்ளுக்குள் துடித்தாலும்,
இதயத்திற்கு கதைகள்...
இங்கே உண்டு...
ஆயிரமாய் ஆயிரமாய்...
ஹார்மோன் மாற்றத்தில்,
காதல் பிறந்தாலும்,
இதயமே பெயரெடுக்கிறது..
காதலின் சின்னமாய்...
உள்ளுக்குள் துடித்தாலும்,
உனக்காகத் துடிக்கிறேனென்று,
கரிசனத்தைத் தேடுகிறது...
காலங்காலமாய்....
அடுத்தவர் துயரத்தில்
ஆறுதல் சொன்னால்,
கருணையின் உறைவிடமாய்,
வர்ணனையில் நிறைகிறது...
இதயம் மட்டுமே...
இரக்கம் தொலைத்து,
உறக்கம் கொண்டால்,
கல் நெஞ்சமென,
கடுஞ்சொல் ஏற்கிறது...
பாறை உள்ளமாய்..
அன்பு ஊற்றெடுக்கிறது
சிலருக்கு இதயம்...
ஆசைத் தீயெரிகிறது...
சிலருக்கு இதயம்...
வஞ்சத்தில் வாழ்கிறது...
சிலருக்கு இதயம்....
வாழ்வே சிறையாகிறது..
சிலருக்கு இதயம்...
காதலில் துடிக்கிறது
சிலருக்கு இதயம்...
காமத்தில் திளைக்கிறது
சிலருக்கு இதயம்...
ஒன்றாய் இருக்கும் இதயம் தான்...
வெவ்வேறாய் உருமாறுகிறது...
வேறுபட்ட மனிதர்களுக்கு...
மனதென்ற ஒன்று,
மனிதருக்குள் எங்கிருக்கிறதோ...
யாருக்கும் தெரிவதில்லை..
உயிரென்ற ஒன்று,
உடலுக்குள் எங்கிருக்கிறதோ...
யாருக்கும் தெரிவதில்லை..
உணர்வென்ற ஒன்று,
உள்ளுக்குள் எங்கிருக்கின்றதோ...
யாருக்கும் தெரிவதில்லை...
ஆனால்,
உணர்வாய்,
உயிராய்,
மனதாய்,
மனிதமாய்...
இதயமே நிற்கிறது..
முழு உருவமாய்....
வெற்று சதையாய்
வடிவில் இருந்தாலும்,
பற்றின் விதையாய்
வாழ்வில் இருக்கிறது...
ஒவ்வொரு உணர்வுக்கும்...
வள்ளுவன் முதல் வைரமுத்து வரை...
காளிதாசன் முதல் கண்ணதாசன் வரை...
வாலி முதல் முத்துக்குமார் வரை...
வரிகளில் வாழ்கிறது...
உணர்வுகளின் கூடமாய்...
இதயம்...
இயக்கத்தில் நின்றாலும்,
எரிதழல் தின்றாலும்...
மண்ணோடு கலந்தாலும்,
காற்றோடு கரைந்தாலும்,
துடித்தவரின் நினைவுகளோடு
நீங்காமல் நிற்கிறது....
இதயங்களில் நிறைந்து....
இதயம்....
❤️✍️ கவிஞர் விஜயநேத்ரன்