
மகளென்னும் தேவதைகள் : தந்தைக்குத் தாயாகும் மகள்கள்
உள்ளுக்குள் மறைத்த பாசத்தையும்,
உள்ளத்தில் ஒளித்த நேசத்தையும்,
உலகுக்குக் காட்டுவதற்கு,
உருவெடுக்கிறார்கள் அவதாரமாய்...
மகளென்னும் தேவதைகள்...
மகள்களைப் பெற்றபிறகுதான்,
முழுமையாய்த் தந்தையாகிறார்கள்..
அப்பாக்களாகும் ஆண்கள்...
போக்கிரித்தனம் செய்தவர்கள் கூட,
பொறுப்பாய் மாறுகிறார்கள்...
அடாவடித்தனம் செய்தவர்களெல்லாம்,
அன்பில் உருகி ஏங்குகிறார்கள்...
சமுதாயச் சீண்டல்களுக்கெதிராக,
சாட்டையைச் சுழற்றுகிறார்கள்..
ஆணவத்தில் சுற்றியவர்கள்
அவளன்பில் அடிமையாகிறார்கள்.
தாயின் சொல்லைத் தட்டிக் கழித்தவர்கள்,
தங்கையின் விருப்பத்திற்கு தடை போட்டவர்கள்,
மனைவியின் கனவிற்கு மறுத்தவர்கள்,
மகளுக்காக வாதாடுகிறார்கள்..
தலையணை மந்திரத்தை,
தாண்டி வந்தவர்கள் கூட,
தன்மகளின் பாசத்தில்,
மூழ்கிவிடுகிறார்கள்...
முழுவதுமாய்...
உலகையே சுற்றிவந்தவர்களுக்கும்,
மகளே உலகமாகிறார்கள்...
மணம் செய்து அனுப்பினால் கூட,
மகளே ஆட்சி செய்கிறாள்...
தந்தையின் இதயச் சிம்மாசனத்தில்...
இறுதிவரை...
தந்தையின் அன்பதனை,
தன்னில் உணர்ந்தவர்கள்..
தாய்மையால் வெல்கிறார்கள்...
பிள்ளை வடிவில் தாயாய்..
மகளின் அன்பினில்,
மனதைத் தொலைத்தவர்கள்...
மறுபடியும் பிறக்கிறார்கள்..
வளர்ந்த குழந்தையாய்...
வாழ்த்துகளுடன்,
கவிஞர் விஜயநேத்ரன்