
நிழலும் நிஜமும் : நினைவலைகளின் யுத்தம்
ஒளி வெள்ளம்
பரவத் தொடங்கியதும்....
ஒளிந்து கொள்கிறது...
நிழல்...
வெளிச்சங்களே....
தீர்மானிக்கிறது...
நிழல்களின் ஆயுளை...
பலம் கொண்ட
வெளிச்சங்களுக்கு
உணவாகி விடுகின்றன...
தேய்பிறையாய் நிழல்கள்...
வெளிச்சங்கள்
பலமிழக்கும் போது,
வெளிவருகின்றன...
உணவாகிப் போன,
உருவாகிய நிழல்கள்...
உருமாறிய நிழல்களால்
முயற்சி செய்கின்றன...
ஒளி தந்த வெளிச்சத்தை...
உணவாக்கிக் கொள்ள...
உணவாக்கிக் கொல்ல....
அம்முயற்சி தொடர்ந்தால்,
இருளென்னும் உலகத்தில்...
இரண்டுமே தொலைந்து போகும்...
இங்கு,
நடைபோடும் நிஜங்கள்
நிலைமாறும்போது
நிழல்களைக் கூட,
இடமாற்றி விடுகிறது...
நினைவுகளில்....
இன்பமாகவும்....
துன்பமாகவும்....
வெளிச்சமென்பது நிகழ்காலம்....
நிழலென்பது நினைவலைகள்....
நிழல்களைத் தொலைத்து விடாது,
ஒளிதனில் தொலைந்து விடாது,
நிஜங்களை எதிர்கொள்வோம்....
எதிர்காலமதை வெல்வோம்.!!!!!
வாழ்த்துக்களுடன்
கவிஞர் விஜயநேத்ரன்