Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

புகையில்லா போகி பூமிக்கு நீதி - போகித்திருநாள் நல்வாழ்த்துகள்

Copied!
Kavignar Vijayanethran

புகையில்லா போகி பூமிக்கு நீதி போகித்திருநாள் நல்வாழ்த்துகள்

பழையன கழிதலும் புதியன புகுதலென 
பழந் தமிழன்  சொன்ன சொல்லை 
தலையெனச் சிரமதி லேற்றி 
தழைத்து வளர்ந்ததே போகி!

தீயவற்றைக் தீயினில் கொளுத்திடவே 
தாய் தமிழன் சொன்னதடா...
வாய்மொழிப் பொருள் உணர்ந்து
தாய் பூமியதைக் காத்திடடா!.

உள்ளிருக்கும் அழுக்கை எல்லாம்
உன் மனதினுள் புதைத்துவிட்டு
ஊரைத் தீக்கிரை யாக்கி நீ
உணர்ந்த தென்ன சொல் மனிதா??.

தீர்ந்து போன பொருளையெல்லாம்
தீயினிலே போட்டுத்  தீய்க்காமல் 
தீய மதவாதத்தையும் தீராத சாதியையும் 
தீவிரவாதத்தையும் தீயினிலிலே நீயிடடா!

இல்லாதோர்க்கு பகிர்ந்து கொடு
இயலாதவர்க்கு முயன்று கொடு
இருப்பதை விரும்பி கொடு 
இல்லை யென்ற சொல்லை விடு!

புகை யிலிட்டு கொளுத்துவதால்
புது வாழ்வு வருவதில்லை.
பகை யொன்றே மிஞ்சுமடா
பார் விடமாய் மாறுமடா!

புன்னகைப்  பூக்களையே தினம் 
பூமியில் நாம் விதைப்போம் 
புகை யில்லா போகி யதை  இந்த 
பூமியில் அழகாய் விளைவிப்போம்!!

போகித் திருநாள் நல்வாழ்த்துக்கள்
✍️ கவிஞர் விஜயநேத்ரன் 

Copied!
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

தெருவோரம் தேவதைதான் - வாயில்லா ஜீவனின் வாய்மொழி

உழவுக்குத் துணைநிற்போம் உழவர்க்குத் தோள் கொடுப்போம் தைப்பொங்கல் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்

Copied!
கவிஞர் விஜயநேத்ரன்

இதயம் : வெற்றுச் சதையா?? பற்றின் விதையா??

கவிஞர் விஜயநேத்ரன்

மகளென்னும் தேவதைகள் : தந்தைக்குத் தாயாகும் மகள்கள்

கவிஞர் விஜயநேத்ரன்

காற்றின் திசையில் கரையும் கால்முளைத்த நினைவுகள்

கவிஞர் விஜயநேத்ரன்

புரியாத புதிர் : மரணமென்னும் முற்றுப்புள்ளி

கவிஞர் விஜயநேத்ரன்

வானுலாப் போகும் வெண்ணிலா