பெறுவதும் கொடுப்பதும்
பேரின்பம்தான் வாழ்க்கையில்...
அது அன்பாக இருக்கும் போது...
ஆனால்,
அதைத் தாண்டியும்,
நிறையவே வழங்குகிறது...
வாழ்க்கை...
அதிகாரமென்பது ஆற்றுநீராய்,
இடமாறிக் கொண்டே இருக்கும்...
வகைவகையாய் வார்க்கபேதங்கள்,
வழியெங்கும் நிரந்தரமாய்...
மேலுள்ளவன் வஞ்சிக்கும் போது,
கீழுள்ளவன் வருந்துகிறான்...
கீழுள்ளவனை சந்திக்கும்போது,
வருந்தியதை வருவிக்கிறான்...
நீ பெறும் போது வலித்தது,
உன்னால் அளிக்கும்போது,
இனிக்குமா என்ன???.
நீ பெறும் போதொல்லாம்,
இயலாமையில் தவிக்கிறாய்..
கொடுக்கும்போது மட்டும்,
எள்ளி நகையாடுகிறாய்...
நீ பெற விரும்பாத ஒன்றை,
ஏனளிக்க நினைக்கிறாய்??...
எதிரில் நிற்பவனுக்கு மட்டும்...
உன்னைப் போலவே
அவனும் மனிதன்தான்...
உன்னைப் போலவே,
உதிரமும் சதையுமான
உயிர் தானே அவனும்...
உனக்கிருப்பது போலவே,
அவனுக்கும் இருக்கிறது...
உணர்வென்ற ஒன்று...
உன்னிடத்தில்
அவனை வைப்பதை விட,
அவனிடத்தில்,
உன்னை வைத்துப் பார்...
சிந்தனை மட்டுமல்ல...
செயல்களும் மாறும்...
நல்வழியில்...
உங்கள்,
கவிஞர் விஜயநேத்ரன்