நவீன காந்தியப் பொம்மைகள்
காந்தியப் பொம்மைகள் மூன்று
கருத்தாய்ச் சொன்னது மூன்று..
கண்ணை மூடிய பொம்மை சொன்னது
தீயவற்றைப் பார்க்காதேயென்று....
காதை மூடிய பொம்மை சொன்னது
தீயவற்றைக் கேட்காதேயென்று...
வாயை மூடிய பொம்மை சொன்னது...
தீயவற்றைப் பார்க்காதேயென்று....
காலப்போக்கில் மாறிப் போனது...
காந்தியம் கூட மறுவிப் போனது..
கண்ணை மூடிய பொம்மை
குருடாய்ப் போனது..
காதை மூடிய பொம்மை
செவிடாய்ப் போனது...
வாயை மூடிய பொம்மை
ஊமையாய்ப் போனது...
தீயவை நடக்கும் போது...
மறைந்து கொண்டதால்...
துணிந்து நிற்கும்
தைரியம் இழந்ததால்...
தவறென்று தெரிந்தும்
பார்த்தும் பார்க்காமலும்,
கேட்டும் கேட்காமலும்,
பேசியும் பேசாமலும்,
கடந்து செல்வதால்
கடமை முடிந்ததா..
இன்று எங்கோ நிகழ்கிறதென்று
கண்ணையும் காதையும் வாயையும்,
மூடிக்கொண்டு கடந்து சென்றால்,
நாளை இங்கேயும் நிகழலாம்..
உங்களின் வாழ்வினிலும்..
தீமையைக் கண்டால்,
காதுகளை மூடாமல்
கருத்துக்களை எதிர்கொள்ளுங்கள்...
கண்ணை மூடாமல்
பார்வையால் சுட்டெரியுங்கள்...
வாயினை மூடாமல்,
வார்த்தைகளை வெளிப்படுத்துங்கள்..
நன்மையை மட்டும் அறுவடை செய்ய
நாம் ஒன்றும் புண்ணிய புருஷர்கள் இல்லை...
நல்லதும் கெட்டதும் நாளும் உண்டு..
நன்மையும் தீமையும் நாலும் உண்டு..
அநீதி என்று தெரிந்தால்,
அதை எதிர்த்து குரல் கொடுங்கள்...
அப்பொழுதுதான்...
நாளைய பொழுது நல்லதாய் விடியும்...
வாழ்த்துக்களுடன்...
கவிஞர் விஜயநேத்ரன்