இது மரங்களுக்கு,
மட்டுமல்ல...
மனிதர்களுக்கும்தான்...
மண்ணில் விழுந்த விதை,
மரமெனத் துளிர்ப்பதொன்றே,
இயற்கையின் நியதிங்கே...
விழுமிடத்தைப் பொறுத்தே,
வளர்ச்சியும் இருக்கிறது..
வாழ்க்கையும் கிடைக்கிறது...
பாலையில் விழுந்தாலும்,
பாறையில் விழுந்தாலும்,
முயற்சிகள் தொடர்கின்றன...
முளைத்து துளிர்க்க..
துளிர்த்து வளர்வதை,
இரசிப்பவர்களை விட,
தடுத்து மகிழ்பவர்களே,
அதிகம் உலாவுகிறார்கள்..
உத்தமன் போர்வையில்....
இருளுக்குள் மறைந்தாள்
ஒளி தேடி நீள்கிறது..
தடை போட்டுத் தடுத்தால்,
வளைந்து தழைக்கிறது...
வெட்டுண்டு வீழ்ந்தால்,
வேர் விட்டு துளிர்க்கிறது.
உடைபட்ட இடத்திலங்கு,
உயிர்ப்புடன் இரண்டாகிறது...
அப்படித்தான்,
நாமும் முயலவேண்டும்...
நம்மைத் தடுக்குமிடத்திலெல்லாம்,
இரட்டிப்பாய்...
வாழ்த்துகளுடன்,
உங்கள்
✍️ கவிஞர் விஜயநேத்ரன்.