Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

கண்ணனும் கர்ணனும் : பிறப்பிலிருந்து இறப்பு வரை

Copied!
Kavignar Vijayanethran

கண்ணனும் கர்ணனும் : பிறப்பிலிருந்து இறப்பு வரை 

மகாபாரதம் என்றதுமே,
மனக்கண்ணில் தோன்றுவது,
கடவுளின் அவதாரமாய்
அவதரித்த கண்ணனும், 
கதிரவனின் அருளாசியால்
உதித்தெழுந்த கர்ணனுமே... 

கங்கை மைந்தர் முதல், 
காண்டீபன் அர்ச்சுனன் வரை, 
கதையின் நாயகர்கள் பலரிருந்தும், 
கண்ணனுக்கும் கர்ணனுக்கும் 
அப்படியென்ன அற்புதம்...

ஆம்..
இருவருமே அற்புதம்தான்..
அவரவர் வழியினில்..
அதனால்தானே என்னவோ, 
கர்ணனை கன்னன் என்றார்...
பாரதத்தில் வில்லிப்புத்தூரார்...

வாசுதேவ கிருஷணனும்
வசுசேனன் கர்ணனும்,
கண்ணனாய் கன்னனாய்,
தங்கள் பெயரில் மட்டுமல்ல.. 
பிறப்பிலும் இறப்பிலும்,
வளர்ப்பிலும் வாழ்க்கையிலும் 
எதிர்கொண்டனர் இணைபோலவே..

கம்சனின் காரக்கிரகத்தில்
வாசுதேவன் தேவகிக்கு 
வரமாய் அவதரித்தான்
கண்ணனெனும் கிருஷ்ணன்...

துர்வாசர் மந்திரத்தில், 
குந்திக்குப் புத்திரனாய்,
கதிரவன் அருள் வழங்க,
உதித்தெழுந்தான் கர்ணன்....

தாய் தந்தை மட்டுமே 
அறிந்திட அவதரித்தான்..
கண்ணன்...

தோழியின் துணையோடு,
குந்தியவள் பெற்றெடுத்தாள்..
கர்ணனை...

தரணியில் பிறந்ததுமே - பெற்ற
தாயவளைப் பிரிந்தனர்...
தேவகியைப் பிரிந்து வந்தான்,
தெய்வீகக் கண்ணன்...
குந்தியைப் பிரிந்து சென்றான்,
தெய்வத்தால் கர்ணன்...

தாயவளைப் பிரிந்ததும்,
தந்தையின் துணையோடு, 
கூடையில் அமர்ந்திருந்து,
ஆற்றைக் கடந்தனர்....
அன்றைய பொழுதிலே...

விதியதன் துணையில்
நதியதன் வழியினில்.
பெற்றவர் அரணோடு, 
வளர்ப்பவரைச் சேர்ந்தனர்...
யாரும் அறியாமல்..

வாசுதேவர் தூக்கி செல்ல,
யமுனை நதி கடந்து,
நந்தகோபன் கரம்சேர்ந்து,
கோபாலன் ஆகி நின்றான்..
கண்ணனவன்...

கதிரவன் பார்வையில்,
கங்கை நதி மிதந்து,
அதிரதன் வசம் சேர்ந்து, 
சூதமகனாகி வாழ்ந்தான்...
கர்ணனவன்..
தாயின் பெயரதையே,
தம்பெயராய்ச் சூடிக்கொண்டு,
வாழ்வில் மகிழ்ந்தனர்...

யசோதை நந்தனென்றும், 
தேவகி மைந்தனென்றும் 
நந்தகோபர்‌ மகனவன், 
நாளும் அழைக்கப்பட்டான்....

இராதேயன் என்றெனவும்,
குந்தேயன் என்றெனவும், 
அதிரதன் மகனவன், 
அகிலத்தில் அறியப்பட்டான்...

பிறப்பின் உண்மையதை, 
பிரிதொரு சூழலிலே, 
இருவரும் அறிந்திடவே, 
அரிதாய் தலைப்பட்டான்,
அவதாரக் கண்ணனவன்..
அதற்குள் சிறைப்பட்டான்,

அரியணைக்குத் தகுதியில்லா
அற்ப யாதவனென்று, 
கௌரவர்த் தலைவனால், 
கடுஞ்சொல்லை ஏற்றான்...
கண்ணனவன் இடையனென...

தனூர்வேதம் கற்பதற்கு, 
தகுதியில்லா சூதனென்று,
அகிலத்தின் இகழ்ச்சியேற்று 
தேரோட்டும் குடியினனாய்,
திறனில்லா சுதமகனாய்,
பாண்டவர் ஐவராலும், 
பழியை ஏற்றுநின்றான்... 
பரிதாபக் கர்ணனவன்....

தன்னை நாடி வந்தவர்க்கு,
தானமென்றும் தர்மமென்றும், 
வாரி வாரி வழங்கினார்கள்..
வாழ்வினிலே இருவருமே...
இல்லையென்று வந்தவர்க்கு 
இல்லையென்று சொன்னதில்லை 
இருவருமே கொடையில்...

தாம் கொண்ட தோழமைக்கு, 
தர்மத்தை மீறி நின்றும்,
தோள் கொடுத்து நின்றனர்,
பாரதப் போரதிலே, 
பாவித்தை தாம் சுமந்து‌...

செஞ்சோற்றுக் கடன்தீர்க்க, 
துரியனுக்கு துணை நின்று,
அதர்ம பழியேற்றான், 
அவனியில் கர்ணனவன்..

அதர்மத்தை அழித்திடும் 
அதர்மமும் தர்மமென, 
மகாபாரத யுத்தத்திலே 
மாபழி ஏற்றுநின்றான்...
மாதவன் கண்ணனவன்...

வரங்களால் உதித்தாலும், 
சாபங்கள் சங்கமிக்க, 
சங்கடத்தில் வாழ்ந்தனர்...
இருவருமே வாழ்க்கையிலே...

கதிரவன் அருளிருந்தும்,
கடுஞ்சாபமது சூழ, 
நிர்க்கதியின்றித் தவித்தான்,
கர்ணனவன் வாழ்க்கையிலே... 

கடவுளாய்ப் பிறந்திருந்தும், 
காந்தாரி சாபமதை,
புன்னகையில் ஏற்றுக்கொண்டான்,
புதிரான கர்ணனவன்...

மகரதியாய் இருந்தாலும், 
மரணத்தின் சூழலதில், 
நிராயுதபாணியென,
சரங்கள் தீண்டிடவே
மரணத்தை தொட்டனர்...
சாபங்களின் துணையதனால்...

குலம் மொத்தமழிவதை, 
மனமின்றிக் கண்டுவிட்டு, 
மரணத்தில் வீழ்ந்தனர்...
மாவீரர் இருவருமே..

வாசுதேவ கிருஷணனும்
வசுசேனன் கர்ணனும்,
கண்ணனாய் கன்னனாய்,
தங்கள் பெயரில் மட்டுமல்ல.. 
பிறப்பிலும் இறப்பிலும்,
வளர்ப்பிலும் வாழ்க்கையிலும் 
எதிர்கொண்டனர் இணைபோலவே..

தண்ணீரில் தொடங்கியது, 
செந்நீரில் முடியும்வரை, 
கண்ணீரில் நனைந்தேதான், 
கடைசிவரை வாழ்ந்தனர்,
கண்ணனும் கர்ணனும்...

ஆனாலும், 
கடவுளாய் இருந்ததால்,
தாங்கிக் கொண்டான்...
கண்ணன்.....

மனிதனாய் பிறந்ததால்
ஏங்கி நின்றான் 
கன்னன்(கர்ணன்).....



FYI: கர்ணனை கன்னன் என்றும் கூறுவர்.

Copied!
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

மாவீரன் துரியோதனன் - கலிபுருஷனின் மறுபக்கம்

காலத்தின் பார்வையில் கர்ணன் தோற்றவன்தான் - கவிஞர் விஜயநேத்ரன்

Copied!
கவிஞர் விஜயநேத்ரன்

கண்ணன் உரைத்த கீதை : விஜயனின் வரியில் நிறைவுப்பகுதி

கவிஞர் விஜயநேத்ரன்

அகிலம் போற்றும் அர்ச்சுனன் : பாரதப் போரின் முதன்மை நாயகன்

கவிஞர் விஜயநேத்ரன்

கட்டுண்ட கண்ணன் : இதயத்தின் அன்பில் சிறைப்பட்ட கிருஷ்ணன்

கவிஞர் விஜயநேத்ரன்

வேள்வியில் உதித்த திரௌபதியின் சுயம்வரம்

கவிஞர் விஜயநேத்ரன்

சக்கர வியூகத்தில் அபிமன்யூ : தனியொருவனாய்ப் பிரகாசித்த இளஞ்சூரியன்