Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

கண்ணன் உரைத்த கீதை : விஜயனின் வரியில் நிறைவுப்பகுதி

Copied!
Kavignar Vijayanethran

கண்ணன் மொழிந்த கீதை - விஜயனின் வரியில்  நிறைவுப்பகுதி 

தனஞ்செயனுக்கு விஸ்வரூப தரிசனம் அளித்தல் 
சகலமுமான பரமாத்மா அதைக் கண்டிட
சரீரமது உதவுவதாலே அதுதன்
ஜனனத்தில் அடையுமே மேன்மை!!
கருணையைப் பெறவும் எல்லையுண்டு
கடுந்தண்டனைதான் அதற்கு மேலே!..

புதிய உடல்தேடிப் புறப்படுமாத்மாவது
புண்ணியம் பெற்றிடும் புதுதர்மவழியிலென
புருசோத்தமன் பொன்மொழி கேட்டப்
புண்ணியத்தாலே புதுவாழ்வு பெற்று
பக்தியின் நிலையென்பது யாதெனப்
பார்த்தனவன் வினவினான் பரவசத்தோடே!!

அனுதினமும் அழுக்கடையும் மனமதை
அவனவன் பக்தியே மாற்றிடும் நெறியினில்!!
நன்மையதனைச் செய்பவர் அவருக்கே
நானும் இடந்தருவேன் என்னிதயத்திலென
மாமொழி உரைத்த மாயவனவனிடம்
மாதவனே! நீஎனக்கு காட்டிடுவாய்!
மகிமையுடைய உனதுருவம் தனையென
பக்தியுடனே வேண்டி நின்றான்
பல்குனியவன் பரவசத்துடனே!!

அமரரும் கண்டிராத அவனுருவதை
அகிலமுழுதும் அவனொளியது பரவ
அர்ச்சுனவனுக்கு காட்சி தந்தான்
விழிகளது வியப்பினில் மூழ்கிட
விஜயனும் கண்டான் விஸ்வரூபமதை!!
வானுயர வளர்ந்து நின்று தாட்சிதந்த
வாமனனவன் மாவுருவமதைக் கண்டு
வார்த்தையற்று நின்றான் அங்கே
வானவர் தலைவர் மகனவனே!!

அகிலமனைத்திற்கும் ஒளிதனையளிக்கும்
அம்புலி ஆதவன் ஒளியனைத்தும்
எம்மில் தோன்றிடும் சிறுதுளியென்றே
தம்மில் காட்டினான் பலகடவுளரையே!!

நான்முகன் நாதிக்கமலத்தில் தோன்றிட
முக்கண்ணன் தன் தவக்கண் திறந்திட
இருபுறம் நின்ற மாவீரர் பலரினில்
ஒருவனவனே உன்னதம் அடைந்தான்!!!

அகிலமது தொடங்கிடும் என்னாலே
அதுதான் அசைந்திடும் என்கண்ணாலே!!
அறிவைப் பெறுவதும் என்னாலே
அழிவைப் பெறுவதும் என்னாலே!!
அதர்மமதை அளித்திடவே அவதரித்தேன்
அர்ச்சுனா நீயதை ஆற்றாவிடில்
அப்பணியும் ஆற்றிடுவேன் அகிலத்திற்கே


மோகம்தனை விட்டொழித்துத் தர்ம
தாகம்தனை ஏற்றிடுவாய் அகத்தினில்,
கலக்கமதைத் துறந்துவிட்டுக் கரமதில்
காண்டீபம் தானெடுப்பாய் நீயேயென
காணும் அனைத்திலும் நிற்கும்
கண்ணனவன் கீதை சொன்னான்!..

மாதவம் செய்தவன் நானேயாவேன்
மாதவா நீ மாவுருவம் துறப்பாயே!!
இறைவா நீயிடும் ஆணையதனை
இதயத்தில் முழுதாய்த் தாங்கி நிற்பேன்
கர்மமாய் ஏற்றதனைக் களத்தில் நானிங்கு
காண்டீபம் ஏந்தி நிற்பேனென்றே
களமதற்குப் புறப்பட்டான் கண்ணனோடு!!!
அர்ச்சுனன் அவனோடு சஞ்சயனவனும்
அற்புதம் கண்டனரே ஹனுமனும்!..
விழிவழிகண்ட விஸ்வரூபம் அதனை
விழியற்றவனுக்கே விளித்தான் விளங்க..

தரணியில் தர்மத்தை காத்திட
தாக்குதல் அங்கே உதயமானதே!
கடலென நிற்கும் கவுரவர்ப் படையதை
களங்கிட அமைத்தனர் வியூகமது
வருவோர் வாழ்வினை இழக்கும்
வலிமை நிறைந்திட்ட வஜ்ரவியூகம்
கண்டங்கு கலங்கிய கவுரவனிடம்
கடமையதனைத் தவறேன் என்றும்
காத்திடுவேன் நானுள்ள வரையென
கங்கைமைந்தன் தேற்றி நின்றிட
துவங்குங்கள் தாக்குதலை என்றே
துரியனவன் துடித்து ஒலிக்க
காண்டீபன் அவனுக்கு ஆசிகூறி
கணை தொடுத்தனன் கங்கைமைந்தனே!....
✍️ கவிஞர் விஜயநேத்ரன் 


Copied!
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

அகிலம் போற்றும் அர்ச்சுனன் : பாரதப் போரின் முதன்மை நாயகன்

கர்ணனின் வாழ்க்கை : வரமா? சாபமா?? - புதிரா?? புனிதமா???

Copied!
கவிஞர் விஜயநேத்ரன்

கர்ணனின் வாழ்க்கை : வரமா? சாபமா?? - புதிரா?? புனிதமா???

கவிஞர் விஜயநேத்ரன்

அகிலம் போற்றும் அர்ச்சுனன் : பாரதப் போரின் முதன்மை நாயகன்

கவிஞர் விஜயநேத்ரன்

கட்டுண்ட கண்ணன் : இதயத்தின் அன்பில் சிறைப்பட்ட கிருஷ்ணன்

கவிஞர் விஜயநேத்ரன்

வேள்வியில் உதித்த திரௌபதியின் சுயம்வரம்

கவிஞர் விஜயநேத்ரன்

சக்கர வியூகத்தில் அபிமன்யூ : தனியொருவனாய்ப் பிரகாசித்த இளஞ்சூரியன்