Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

கட்டுண்ட கண்ணன் : இதயத்தின் அன்பில் சிறைப்பட்ட கிருஷ்ணன்

Copied!
Kavignar Vijayanethran

கட்டுண்ட கண்ணன் :  இதயத்தின் அன்பிற்கு ஆட்கொள்ளும் இறைவன்.

ஈராறாண்டு வனவாசமது முடிந்து
ஓராண்டு காலம்  அஞ்ஞாதம் வசித்து 
இழந்ததைப் பெறும்  ஆசையதனை 
இதயத்தில் தான் கொண்டு 
சிந்தனை செய்து நின்றான்
குந்தியின் புத்திரனே..










   
தூதுவனாய்ச் செல்வதற்கு மாதவனே  வேண்டுமென
குலமாதவளுடன் தாள் பணிந்த தர்மனவன் 
உள்ளக் குறிப்புகளை எடுத்து வைத்தான்
உலகைக் காக்கும் கண்ணனிடம்... 

அன்புத்தம்பியர் உள்ளமோ போர்  விரும்ப 
அன்பொன்றே போதுமென உள்ளத்தில் நானெண்ண,
தூதுவனாய்ச் சென்று எமக்காய், 
வாதிட வேண்டும் நீ தலைநகரில்..



அரவக் கொடியோனிடம் சரிபாதி நாட்டைக் கேள்
அதனைத் தரமறுத்தால் ஐந்து ஊரைக் கேள்
அதனினும் அடம்பிடித்தால்  ஐந்து வீடு கேள்
தன்னிலை மாறாது  எந்நிலையாயினும்
தர்மத்தை நிலைநாட்டுவாய் நீயென 
தர்ம புத்திரனாய்  வேண்டி நின்றான் 
மனமுருக.....

மற்றவரின் மனநிலை நானுணர்ந்து
கொற்றவனைத் தான் கண்டு வேண்டுவதை
பெற்றுனக்குத் தருவேன்  விடைதருவாய்
சற்றெனக்கு  நீயெனப்  புறப்பட்டான் 
சிந்தையில் வேறெண்ணம் கொண்ட கோபாலன்.....

அண்ணன் சொல்லாய்க்  கண்ணன் சொன்னதை 
அனுமனனுசன்  மறுத்தான் ஏற்றிடவே....
பிச்சை பெறும் இச்சை எமக்கில்லை
பீமனிவன்  கரங்கள் உடனிருக்கையிலே 
வஞ்சித்த சபையினரைத் தண்டித்து 
நெஞ்சத்தில் நிற்கும் பகையழித்து
எடுத்த சபதமதை  முடிக்கப் போர்
தொடுப்பதொன்றே வழியென்று
வாயு மைந்தனவன்  முன் மொழிந்தான்
வாசுதேவ கிருஷ்ணர் அவரிடம்...



கடுமொழியாய்ப் பிரிகோதன் உரைத்ததையே 
கண்ணன் தாள் பணிந்தே மொழிந்தான்
கரத்தினில் வில்லேந்தும் காண்டீபன்.. 

பாண்டவர் விருப்பங்கள் யாதென்று 
பரந்தாமா நீ அறிவாய் முழுமையாய்., 
ஆண்டிடும் அதர்மத்தை வேரறுக்க 
ஆவண செய்திடுவாய் என்னிறைவாவென 
காண்டவ வனமழித்து கவின்மனையெழுப்பிய
தனஞ்செயன்  உரைத்ததையே தானும் வழிமொழிந்தான்...
தரணியின் பேரழகன் நகுலனும் அன்புடனே......

விதியால் இப்பணி  ஏற்றேன்
மதியுணர்ந்து நீ உரைப்பாய்
சகியே உன் நிலையெண்ண 
சங்கடத்தை  நீ மொழிவாயெனச் 
சாதுவாய் மாயவனவன் கேட்டான்....
யாதும் உணர்ந்தவன் யாகசேனியிடம்...

மாதுவின் நிலை அறிந்தும்
தூது நீ போவதுன் தர்மமா?
யாசகம் மட்டுமே போதுமென்று
கேசவா நீ நினைத்தாயோ?
யாம்பெற்ற வலிதீர வழியதுவா
யாதுமானவனே  சொல்வாய் நீ...

கவிழ்ந்த யிவர் முகங்கள் நிமிர்வதெப்போ?
அவிழ்த்த என் கூந்தல் அள்ளி முடிவதெப்போ?
எடுத்த சபதம் எல்லாம் முடிப்பதெப்போ?
எல்லாம் உன்பெயரால் நடப்பதெப்போ??
அங்கு நடந்ததை ஆண்டவனே மறந்தாயோ??
சங்கடங்கள் தீர்ப்பவனே சரியெது நீ  உரைப்பாயா??
என்று அவளுரைத்தாள் கண்ணனிடம்., 
அன்று நடந்ததெல்லாம்  மனதிலெண்ணி...
ஆழிப் பேரலையாய் எழுந்த கண்ணீருடன்...



சதியால் வீழ்ந்ததை சரிசெய்வேன்
விதியால் நடக்குமது வருந்தாதே 
விடையதனை உனக்களிப்பேன் 
விழிநீரை நான் துடைப்பேனென 
விடைபெற்றான்  மாதவன் அவனே.....

சகலமும் தெரிந்தவனே சாஸ்திர வித்தகனே
அகிலத்தின் நலத்திற்காய் அமைதித் தூதுவனாய் 
தர்மன் சொல்லிவிட்டான் தலைநகர்  செல்வதற்கே
கர்மப் பலன் தீர்க்க கண்ணன் போகின்றேன்
கருத்தொன்று சொல்வாயா  செருக்களத்தைத் தவிர்ப்பதற்கு 
மறுமொழி நீ மொழிவாயென மாதவன்தான் கேட்க 
அஸ்வினி குமாரனவன்  பதிலுரைத்தான்...

காட்சிக்கு எளியவனே கார்முகில் மேனியனே  
சாட்சி நீயன்றோ சகலமும் நீயன்றோ
இருந்தும்  உரைக்கின்றேன் இதற்கோர் வழிதனையே!!

பார்த்தனின்   வில்லுடைத்துப்  பீமனின் கதையழித்து 
பாஞ்சாலிக் கருங்கூந்தல் தானறுக்கக் 
கர்ணனவனுக்கு அரசனாக முடிசூட்டி 
கண்ணா  உன்னைக் கட்டிப் போட்டால்
கடும்போரைத் தடுத்திடலாமென உரைத்தான்



உதடுகளின் புன்னகையை உதிர்த்தவன்
உன்னால் இயலுமோ என்னைக் கட்டிட
என்றேயவன் சிரித்து எடுத்தான் பல உருவம் 
மண்டபத்தில் நிறைந்திருந்த மாயவனைக் கண்டு
சிந்தையிலே படித்தான் கிருஷ்ண மந்திரத்தை..

எடுத்த உருவங்கள் ஒவ்வொன்றாய் ஒன்றிணைய
தொடுத்த மந்திரத்தால் ஒன்றாகிக் காட்சி தந்து
உதிர்த்த அன்பதனால் கட்டுண்டான் உள்ளத்தால் 
உலகை ஆளுகின்ற மாயாவிக் கண்ணவன்
வென்றுவிட்டாய் சகாதேவா வேண்டியதை நீகேள்
தந்திடுவேன் நானுனக்கின்றென மொழிந்தான்
கட்டுண்டக் கண்ணவன்  கட்டவிழ்க்க வேண்டிட.

சோதரர் ஐவரையும் செருக்களத்தில் காத்துப் 
பாதகம் தடுத்திடுவாய்ப்  பரந்தாமாயென்றே
மாதவனவனிடம் வரம் கேட்டான்.. 
சாதகம் யாதென சகலமும் உணர்ந்த
சாஸ்திர வித்தகன் சகாதேவ னவனே!!!



சிந்தையிலே வேண்டுவது அதுதானோ
சிந்தித்து உரைப்பாய் நீ எனக்கென 
சுதர்சனம் ஏந்தியவன் குதர்க்கமாய் கேட்டாலும் 
சூழ்நிலை அறியாத சாஸ்திர வித்தகனும்
வாய்மொழி மாறாது வாக்கதனை கேட்டிட
வரம்தந்து தூது சென்றான் வைகுந்தநாதன் அவனே...

✍️ கவிஞர் விஜயநேத்ரன் 
Copied!
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

வேள்வியில் உதித்த திரௌபதியின் சுயம்வரம்

அகிலம் போற்றும் அர்ச்சுனன் : பாரதப் போரின் முதன்மை நாயகன்

Copied!
கவிஞர் விஜயநேத்ரன்

கர்ணனின் வாழ்க்கை : வரமா? சாபமா?? - புதிரா?? புனிதமா???

கவிஞர் விஜயநேத்ரன்

கண்ணன் உரைத்த கீதை : விஜயனின் வரியில் நிறைவுப்பகுதி

கவிஞர் விஜயநேத்ரன்

அகிலம் போற்றும் அர்ச்சுனன் : பாரதப் போரின் முதன்மை நாயகன்

கவிஞர் விஜயநேத்ரன்

வேள்வியில் உதித்த திரௌபதியின் சுயம்வரம்

கவிஞர் விஜயநேத்ரன்

சக்கர வியூகத்தில் அபிமன்யூ : தனியொருவனாய்ப் பிரகாசித்த இளஞ்சூரியன்