Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

வேள்வியில் உதித்த திரௌபதியின் சுயம்வரம்

Copied!
Kavignar Vijayanethran

வேள்வியில் உதித்த திரௌபதியின் சுயம்வரம்

இதயத்தில் அவமானம் இருளெனப் புடைசூழ
இரு துண்டான தேசத்தால் உண்டான குரோதத்தால்
வஞ்சமது நெஞ்சமதில்க் கனலாய் எரிந்திடவே
பாஞ்சால மன்னனவன் பரிதவித்து நின்றதிலே,
வேண்டினான் வரமதனை வெல்லும் வழி கேட்டு
வேள்வித் தீ வளர்த்து கேள்விக்குப் பதில் தேடத்
தோன்றினாள் பெண்ணொருத்தித் தோகை மயிலாக
தோற்றத்தில் மாந்தர் மனம் கொள்ளையிட்டு
மாற்றத்தை உண்டாக்கும் மகத்தான கிருஷ்ணையே. ...


கார்முகில் நிறத்தினில் கவின்மிகு எழிலுடன்
வானவர் விழிகளும் வியந்திடும்  வனப்புடன்
துருபதன் வெறுப்பினைத்  தீர்த்திடும் வரத்துடன்
நெருப்பினில் தோன்றிய யாகசேனியவள்
பிறந்திட்ட தேசத்தால் பாஞ்சாலியாய் - மகளாய்ப்
பெற்றவன் பெயரால் திரௌபதியாய் - கரிய
நிறத்தினால் கிருஷ்ணையெனவும் நிறைவாயழைத்து 
நித்தம் போற்றினர் அலைமகளவளை..

வரத்தினால் பெற்றவளின் சுயம் வரமதற்குக்
கரத்தினில் வில்லேந்தி கண்டிடும் பிம்பத்தால்
சிரமதின் மேல்  சுழன்றிடும் மச்சத்தின் விழியினைச்
சரமதை தொடுத்து இலக்கினை வீழ்த்தும்
அரங்கினை வைத்தான் அவளை மணப்பதற்கு, 
அவளுடன் உதித்த துருபதன் மைந்தனவன் 
மயிலிறகினைச் சூடிய மயூரன் மொழிகேட்டே!!.

பர்வதத்தை அசைப்பதாய்ப் பலர் உணர்ந்து
பரிதவித்துச் சிரம் கவிழ - அரங்கினில்
கர்வம் தலைக்கேற  வில்லேந்தி  சிலரங்கு
நாணேற்றும் முயற்சியிலே நாணி வெளியேற
சாரங்கன் தனுசினிடம் தடுமாறி வீழ்ந்து
சகலரும் நின்றனரவர்தம் நிலையிழந்து
சர்வம் அமைதியென சங்கடம் குடியேற,
மந்தையாய் வந்து நின்ற மகரதிகள்
சிரம் கவிழ
விந்தை செய்வோர் இல்லையா 
வீரரில் இங்கென
சிந்தையில் உதித்ததைச் சிலாகித்தான்
அரங்கத்தில்
தந்தையவன் உள்ளமோ தவிப்பால்
அகம் துடித்து ....

திரௌபதன் சொல்கேட்டு
கரத்திலே வில்லெடுத்தான் 
அதிரதன் கண்டெடுத்த கதிரவன் புதல்வனவன்,
தீஞ்சடையன் வில்லதனில் திறமாய் நாணேற்றி
அஞ்சாமல் குறி வைத்து அம்மாய இலக்கினை
ஆதவன் மகனவன் இலக்கை எட்டிடும் நேரத்தில்
பாஞ்சால இளவரசி பதறித் தானெழுந்து
தாழ்ச்சி குலத்தவனைத் தலைவனாய்
ஏற்கமாட்டேன் என
அகன்ற விழி திறந்து அவளுரைத்த
மொழியினிலே
அங்க மன்னனவன் விழிசிவந்த கதிரோனாய்
அங்கிருந்து அகன்றான் அவமதிப்போடு.. 



அனந்தன் திட்டமது அவ்விடத்தில் வெற்றிபெற 
அந்தண உடையதைத் தரித்து அரங்கமதற்கு 
வந்தவன் வென்று நின்றானந்த இலக்கோடு - சுய
வரமதன் நாயகியாம் மங்கையின் மனதினையும்
கரத்தினில் வில்லேந்தும் காண்டீபதாரியவனே!!!.

✍️ கவிஞர் விஜயநேத்ரன்

Copied!
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

சக்கர வியூகத்தில் அபிமன்யூ : தனியொருவனாய்ப் பிரகாசித்த இளஞ்சூரியன்

கட்டுண்ட கண்ணன் : இதயத்தின் அன்பில் சிறைப்பட்ட கிருஷ்ணன்

Copied!
கவிஞர் விஜயநேத்ரன்

கர்ணனின் வாழ்க்கை : வரமா? சாபமா?? - புதிரா?? புனிதமா???

கவிஞர் விஜயநேத்ரன்

கண்ணன் உரைத்த கீதை : விஜயனின் வரியில் நிறைவுப்பகுதி

கவிஞர் விஜயநேத்ரன்

அகிலம் போற்றும் அர்ச்சுனன் : பாரதப் போரின் முதன்மை நாயகன்

கவிஞர் விஜயநேத்ரன்

கட்டுண்ட கண்ணன் : இதயத்தின் அன்பில் சிறைப்பட்ட கிருஷ்ணன்

கவிஞர் விஜயநேத்ரன்

சக்கர வியூகத்தில் அபிமன்யூ : தனியொருவனாய்ப் பிரகாசித்த இளஞ்சூரியன்