Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

சக்கர வியூகத்தில் அபிமன்யூ : தனியொருவனாய்ப் பிரகாசித்த இளஞ்சூரியன்

Copied!
Kavignar Vijayanethran

சக்ரவியூகத்தில் அபிமன்யூ :

தர்மனைச் சிறைபிடிக்க அமைத்தனர்
தகுந்ததோர் வியூகமொன்றை அங்கே.,
சாவினைப் பரிசளிக்கும் துரோணனின்
சக்கர வியூகம் அதன்பெயராம்...
கண்ணன் காண்டீபன் தவிர முழுதாய்க்
கற்றவர் யாருமங்கில்லை அதனை...

கண்ணனோடு காண்டீபனை யுத்தக்
களம் விட்டு நீக்கினர்.,
சுசர்மன் துணைகொண்டு சகுனி
சூழ்ச்சி வலையொன்றைப் புனைந்து...

தாய்மானம் காத்திட, தந்தைபுகழ் போற்றிட
தனியொருவனாய்க் களம் புறப்பட்டான்
ஆதிமட்டுமே அறிந்து அந்தமறியாது
பாதிவரைக் கற்றவனாம் வியூகத்தை,
பார்த்தன்  பெற்ற தவமைந்தன் அபிமன்யூ ,
பயமறியா இளங்கன்று வியூகமுடைத்து...
பாய்ந்து சென்றதங்கே மையத்திற்கு,
தந்தை நால்வர் அவன் பின்தொடர..


வஞ்சனைத்தீ மனதிற்க் குடிகொள்ள
வரமொன்றைச் சிவனிடம் பெற்றதினால்,
செயத்ரதன் என்னும் சீர்கெட்ட மதியினன்
பாண்டவர் நால்வரையும் அவனங்கே
பாதியில் நிறுத்தி விட்டான் பாவியவன்..

முக்கால் அக்ரோணி கவுரவர் சேனையை
முழுதாய் மண்ணில் வீழ்த்தி விட்டு
முன்னேறிச் சென்றான் பிறைவம்சன்
இந்திரன் வழிவந்த இளந்தளிர் வியூக
இதயம்வரை சென்று நின்றான் ....
மகரதி எழுவருமொன்றாய் எதிர்கொள்ள
மார்தட்டி நின்றான் மாவீரனாய்...

வஞ்சித்த சல்லியனை அவனங்கு
வன்மையாய்ச் செந்நீர்சிந்த தாக்கி
உயிர் பறித்தான் சல்லியன் உடன்பிறந்தோனை.!
சரம்கொண்டு ரணம் செய்தான்,
சதி செய்த சகுனியின் தேகத்தை...

பதிலுரைத்தான் பாலகன் தன் சரங்களினால்,
துகிலுரைத்த துச்சன் கரங்களுக்கு...

குருதுரோண னவன் மௌனத்திற்காய்க்
குருதி மண்ணில் சிந்த வைத்து,
கணைதொடுத்த கர்ணனின் வில்லின்
நாணறுத்தான் அவன் நா பேசியதால்.,

உடலெல்லாம் குருதி பெருக்கெடுக்க
உயிர் மட்டும் விட்டுவைத்தான்...
துரியோதனன் அவனை பீமனுக்காக..

கிருபனைக் கிறங்கடித்த - வில்லாளி
சிறுவனவன் வில்லாற்றல் கண்டு,
அதிசயித்து நின்றனர் குருயிருவர்,
அமரவேந்தன் வழிவந்த அர்ச்சுனன்,
அவன்மைந்தன் ஆற்றல்கண்டு.,

மண்ணில் அங்கு கூடிநின்ற வீரரெல்லாம்
புண்ணீர் சிந்த வைத்தான் களத்தினில்
புயல்வேக வில் கணைதொடுத்து..

துரியன் உயிரதனைக் காத்திட
துணைநின்ற அவன் மகன் லட்சுமனை,
கணை கொண்டு உயிர்பறித்தான்
காண்டீபன் மகனிவன்..

புதல்வன் மரணங்கண்டு துரியன்
புத்தியதை இழந்து சினத்தினால்,
மொத்தமாய் அனைவரும் தாக்கிடவே,
சத்தமாய் ஆணையிட்டான் சேனைக்கு

சேனைத்தலைவன் துரோணன் சொன்ன
ஆணையதனைச் சிரமேற்று களத்தில்
வீரன் அபிமன்யூ கரத்திலிருந்த
வில்லை உடைத்திட்டான் கர்ணன்.,

குருதுரோணன் விற்கணைகொண்டு
குதிரைகளின் உயிரைக் கொன்றிட
இரதமதை  ஆச்சாரி கிருபன் சிதறடிக்க,
திண்மமாய்க் கையினில் வாளதனையேந்தி
திணறடித்தான் வீரர் பலரை , இரதச்
சக்கரம் ஏந்தி சாய்த்தான் சிலரையங்கு!!

பலமுனைத் தாக்குதலில் கையிலிருந்த
பாவ சக்கரமும் சிதைந்தொடைந்திட ,
இரத்தக் கடல் உடற்நனைத்திட
அங்கிருந்த கதையதைக் கையிலேந்தி
அஸ்வத்தாம னவன் மேல் பாய்ந்த
அந்தநொடிப் பொழுதில் அவன் விலகிட
துச்சன் மகன் துர்மசனோடும்
துணிவாய்ச் சண்டையிட்டான்..
வீரர்கள் இருவருமே சண்டையில்
வீழ்ந்தனர் மண்ணின் மடியினிலே...

களைப்பின் மிகுதியினால் எழுந்திடவே
களத்திற் கால் நொடி தாமதிக்க,
தலையில் தாக்கிக் கொன்றானங்கே,
தரணி போற்றும் மாவீரனை
துச்சன் மகன் துர்மசன் அவனே!!

தந்தை நால்வர் கண்முன்னே
தன்னுடல் அதை மண்ணில்விட்டு
இன்னுயிர் பிரிந்து சென்றான் சொர்க்கத்திற்கு...
இந்திரன் வழி வந்த அழகிய
சந்திரகுல ரகுவரனவன்!!  
பாலகன் உயிரைப் பறித்திடும்
பாவமதைப் பலர்கூடி செய்ததனால்,
அம்புலி வம்ச ஆதவனங்கே
அஸ்தமனம் ஆனது அதர்மத்தினாலே!!

✍ கவிஞர் விஜயநேத்ரன்
Copied!
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

கண்ணன் மொழிந்த கீதை - விஜயனின் வரியில் பகுதி 3 : சகலமும் தானென சய்வசச்சிக்கு உணர்த்துதல்

வேள்வியில் உதித்த திரௌபதியின் சுயம்வரம்

Copied!
கவிஞர் விஜயநேத்ரன்

கர்ணனின் வாழ்க்கை : வரமா? சாபமா?? - புதிரா?? புனிதமா???

கவிஞர் விஜயநேத்ரன்

கண்ணன் உரைத்த கீதை : விஜயனின் வரியில் நிறைவுப்பகுதி

கவிஞர் விஜயநேத்ரன்

அகிலம் போற்றும் அர்ச்சுனன் : பாரதப் போரின் முதன்மை நாயகன்

கவிஞர் விஜயநேத்ரன்

கட்டுண்ட கண்ணன் : இதயத்தின் அன்பில் சிறைப்பட்ட கிருஷ்ணன்

கவிஞர் விஜயநேத்ரன்

வேள்வியில் உதித்த திரௌபதியின் சுயம்வரம்