Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

கர்ணன் : தண்ணீரில் தொடங்கி செந்நீரில் முடிந்த கண்ணீர் வாழ்க்கை

Copied!
Kavignar Vijayanethran

கர்ணன் : தண்ணீரில் தொடங்கி செந்நீரில் முடிந்த  கண்ணீர் வாழ்க்கை

பெற்றவள் ஆற்றில் விட்டாள்..
பேணியவள் பெற்றவளானாள் ...
கதிரவன் மகனிங்கு
அதிரதன் பிள்ளையானாய்.
சூரிய புத்திரன் நீயிங்கே 
சுத புத்திரனாகி நின்றாய்...

வளர்ந்த குலமது உன்
வளர்ச்சியைப் பறித்தது.,
கல்விச் சாலைகளுக்கு
கடிவாளமதைப் போட்டு..

அந்தணன் என்று சொல்லி
அஸ்திரம் அதைக் கற்றாய்..
உலகம் உனை துரத்த
உண்மையை நீ மறைத்து..

விதியென்ற பெயருடன்
சதியதை அரங்கேற்றிய
உதிரம் குடிக்கும் வண்டு
உன் உயிரையும் குடித்தது..

அவமானங்கள் அதைப் போக்கி
உன்மானம் காத்து நின்றான்
அவனிக்கு அதர்மியாயினும்
அவன் உனக்கு நண்பனான்..

மித்திரன் வாழ்வுக்காக
சத்தியம் நீ மறந்தாய்
முக்கிய நேரங்களில்..

அதர்மம் உன்னை
அவ்வப் பொழுது
ஆட்கொண்டதால்
தர்மம் உன்னுள்ளே
தவித்து நின்றது.,

பெற்றவள் தேடி வந்தாள்- தான்
பெற்றவரைக்  காப்பதற்கு...
காட்சிகள் மாறியது
கன நேரத்தில்..
சத்ருக்கள் ஆயினர்
சகோதரர்களாய்..

நாடாளும் வாய்ப்போடு
கோபாலனும் தூதுவர.
நட்பே போதுமென்று 
நயமாய் உரைக்க
நவநீதனும்  உன்னை
போற்றி நின்றான்.,

தானத்தை உந்தன்
தர்மம் என்றாய் - உயர்
மானத்தை காக்க 
தவித்து நின்றாய்..

தெய்வ கவசமதை வேண்டி
தேவேந்திரனே நின்ற போதும்
தயங்காமல் தானமிட்டாய்..

உடன்பிறந்தோர் போரிடவே
உன் பிறப்புண்மையை
ஊமையாக்கினாய்..

தளபதி சொல்லுக்காக
தம்பிமகன் நாணறுத்தாய்..
பாலகன் மரணத்தின்
பாவத்தினை நீ ஏற்றாய்...

பெற்றவள் கேட்டதற்காய்
பிறந்தோர் நால்வரை
விட்டு விட்டாய்..

பேணிய நட்பிற்காக
உந்தன் உயிரையும்
விட்டு விட்டாய்...

சாபங்கள் ஒன்றுகூடி
பாவங்கள் செய்ததுனக்கு..

சக்கரங்கள் கூட
சதி செய்தது
உனக்கெதிராய்..

அஸ்திரங்கள் உன்னுடன்
அறப்போர் நடத்தியது ..

அன்னை பூமி கூட 
மற்போர் நிகழ்த்தினாள்..

சாரதி சல்லியனும் 
சொற்போர் நிகழ்த்தினான்..

உதிரம் விஷமானது
உறவே பகையானது
உணர்வும் தடுமாறிட
உயிரும் ரணமானது
தானம் எதிரானது
பானம் சதிசெய்தது.

தண்ணீரில் தொடங்கிய
கண்ணீர் வாழ்வானது
செந்நீரில் விடைபெற்றது...

✍️ கவிஞர் விஜயநேத்ரன்


Copied!
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

மகாபாரதம் : கண்ணன் உரைத்த கீதை-விஜயனின் கவிதை வரியில் பகுதி 1

கங்கை மைந்தர் பீஷ்மர் : அஸ்தினாபுரத்தின் அரியணைக்காவலன்

Copied!
கவிஞர் விஜயநேத்ரன்

கர்ணனின் வாழ்க்கை : வரமா? சாபமா?? - புதிரா?? புனிதமா???

கவிஞர் விஜயநேத்ரன்

கண்ணன் உரைத்த கீதை : விஜயனின் வரியில் நிறைவுப்பகுதி

கவிஞர் விஜயநேத்ரன்

அகிலம் போற்றும் அர்ச்சுனன் : பாரதப் போரின் முதன்மை நாயகன்

கவிஞர் விஜயநேத்ரன்

கட்டுண்ட கண்ணன் : இதயத்தின் அன்பில் சிறைப்பட்ட கிருஷ்ணன்

கவிஞர் விஜயநேத்ரன்

வேள்வியில் உதித்த திரௌபதியின் சுயம்வரம்