ஆக்கலும் அழித்தலுமியலாததே
ஆத்மா எனறுரைப்பேன் - அதை
நிலத்தினுள் புதைத்திட முடியோம்
நீர் கொண்டு நீக்கிடயியலேன்
நெருப்பிட்டு எரிக்கவும் இயலேனென
கேசவன் உரைத்த பதிலுக்கு கேள்வியையே விடையாக்கினான்
பரிதவிக்கும் பார்த்த னவன்..
உலகின் உள்ளதெல்லாம்
உடற்கொண்டே பார்க்கின்றோம்
உண்மை எதுவென்றெனக்கு
உரைப்பாய் நீயே என்றுரைத்தான்..
அறிவை உணர ஆத்மாவே
அருந்துணை செய்திடும்,
அதைப் பெறும் முறையே
அதிசய சுபாவமாகும்..
அறிவின் வெற்றியென்பது
ஆத்மாவை அறிவதென்பேன்.,
அறிவரனைவருமே தர்ம
அதர்ம வழிதனை அகிலத்திலே!!
காரிருள் நிறைந்து - உடற்
களி மட்டும் புணருகின்ற
காழ்ப்புணர்ச்சி நிலையே தமஸென்பேன்,
மோகம் மூப்படைந்து தானென்ற
அகங்காரமிகக் கொண்ட
அதீத இரஜஸ் நிலையதுவே!!
சத்யம் யாதென அறிந்திட்ட
சத்வமென்ற ஞான நிலையே
உனக்குள் இறைவனைத் தேடிடும்
உன்னத நிலையாகும்...
ஆசையும் அதீத எதிர்பார்ப்பொன்றே
அதர்மம் பற்பல புரிந்திட
அழைத்து செல்லும் வழியென்பேன்..,
சுயநலம் தலைக்குடிகொண்டு
சுற்றம்படும் துன்பமதிலேயே
சுகமிகக் காணுகின்ற
அற்ப உடலை அழிப்பதே
அதன் தண்டனையாகுமென்பேன்..
புதியன புகுமுன் பழையன கழிதற்போல
புதுஉடற் தேடியே புறப்படுமே
புண்ணிய ஆத்மா அதுதன்
பூத உடல் நீங்கியே!!
அற்ப உடல் நிங்கி
அற்புதங் கொண்ட உடலையது
அடைகின்ற அந்நொடியிலதன்
அழிந்திடும் அதர்மதில்..
ஆத்மா அழிவதில்லை -
அழிவதாசை கொண்ட உடலொன்றே!!!
ஆத்மாவை சூழும் அந்த
அதர்ம காரிருள் நீக்கி
அற்புத பரமாத்வாவின் திரு
அடிதனை சரணடைவதொன்றே
அது கொண்ட கடமையென்று
கண்ணனவன் உரைத்திடவே
களங்கண்டு கொலைபுரிந்தால்
கர்மமென் ஆத்மாவை அது
கரை படிய செய்திடாதாயென
கலங்கி நின்றான் காண்டீபன் ..
உன்னத உலகொன்றை உத்தமமாய்
உருவாக்கிட உறுதுணை புரிந்திடும்
கடமை மட்டும் உனதென்பேன்,
கர்மமது எனையே வந்தடையும்,
கரத்தில் காண்டீபமேந்தி
களம் புகுவாயென்றே
கண்ணனவன் உரைத்தானே!!!
தொடரும்...
✍️ கவிஞர் விஜயநேத்ரன்