Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

காலத்தின் பார்வையில் கர்ணன் தோற்றவன்தான் - கவிஞர் விஜயநேத்ரன்

Copied!
Kavignar Vijayanethran

காலத்தின் பார்வையில் கர்ணன் தோற்றவன்தான் - கவிஞர் விஜயநேத்ரன் 

வில்லுக்கு விஜயனென்று 
வல்லவர்கள் சொல்கிறார்கள்.. 
விஜயத்தை சுமந்தநின்ற, 
விருஷனென்னும் கர்ணனவன் 
வரலாற்றில் தோற்றவனாம்..

ஆம்..
கர்ணன் தோற்றவன்தான்...
காலத்தின் பார்வையிலே... 

கரமறியா கொடையதனை, 
வந்து நின்ற வறியவர்க்கு,
மனமுவந்து கொடுத்ததினால்,
கர்ணன் தோற்றவன்தான்...
காலத்தின் பார்வையிலே...

துர்வாசன் வரம் கொடுத்தும், 
துயரோடு சாபங்களால், 
வாழ்ந்திட்ட வள்ளலந்த, 
கர்ணன் தோற்றவன்தான்...
காலத்தின் பார்வையிலே...

சர்வேசன் வில்லிருந்தும், 
சரம்தொடுக்கும் திறனிருந்தும்,
சூழ்நிலைக் கைதியான, 
கர்ணன் தோற்றவன்தான்...
காலத்தின் பார்வையிலே...

கதிரவன் கதிரொளியாய்,
கன்னியவள் பிரசவிக்க, 
கங்கையிலே மிதந்ததினால், 
கர்ணன் தோற்றவன்தான்...
காலத்தின் பார்வையிலே...

அன்னைமடி தவழுகின்ற, 
அன்புப் போட்டியினில், 
அவளுள்ளம் தோற்றதினால், 
கர்ணன் தோற்றவன்தான்...
காலத்தின் பார்வையிலே...

சூரியன் பிரதியிவன், 
சுடமகனாய் மாறியங்கு, 
அங்கீகாரம் தொலைத்ததனால்,
கர்ணன் தோற்றவன்தான்...
காலத்தின் பார்வையிலே...

தெய்வத்தின் பிள்ளையிவன், 
தேரோட்டும் குடியினனாய்,
உரிமைகளை இழந்தததனால், 
கர்ணன் தோற்றவன்தான்...
காலத்தின் பார்வையிலே...

தனூர் வேத ஆசைதனை, 
தன்நெஞ்சில் சுமந்தவனின், 
உயர்கல்வி மறுத்ததனால், 
கர்ணன் தோற்றவன்தான்...
காலத்தின் பார்வையிலே...

அஸ்திரங்கள் கற்றறிய, 
அந்தணனாய்ப் பொய்யுரைத்து, 
சாபங்களைப் பெற்றுக்கொண்ட, 
கர்ணன் தோற்றவன்தான்...
காலத்தின் பார்வையிலே...

இந்திரன் சதியதனால்,
இறையதன் விதியதனால், 
குருவிடம் சிக்கியதால்
கர்ணன் தோற்றவன்தான்...
காலத்தின் பார்வையிலே...

அவதாரப் பரசுராமர், 
அவன் பிறப்பை அறியாது, 
அளித்திட்ட சாபமதால், 
கர்ணன் தோற்றவன்தான்...
காலத்தின் பார்வையிலே...

வில்லெடுத்து நிற்கையிலே,
சொல்தொடுத்து வீழும்போது,
துரியனால் நிமிர்ந்ததனால்,
கர்ணன் தோற்றவன்தான்...
காலத்தின் பார்வையிலே...

பாஞ்சால சுயம்வரத்தில், 
பாஞ்சாலி அபஸ்வரத்தில், 
தலைகவிழ்ந்து வந்ததனால், 
கர்ணன் தோற்றவன்தான்...
காலத்தின் பார்வையிலே...

தூது வந்த கண்ணனவன்,
நாடாளும் வாய்ப்பளித்தும், 
நட்பொன்றே போதுமென்ற, 
கர்ணன் தோற்றவன்தான்...
காலத்தின் பார்வையிலே...

இந்திரனே தேடிவந்து, 
இறைஞ்சிக் கேட்டதனால், 
கவசத்தை அளித்ததனால், 
கர்ணன் தோற்றவன்தான்...
காலத்தின் பார்வையிலே...

தன்னுடைய பிறப்பதனை, 
கண்ணவன் சொல்லிடவே, 
கதறிங்கு நின்றதனால், 
கர்ணன் தோற்றவன்தான்...
காலத்தின் பார்வையிலே...

அய்வரைக் காத்திடவே,
அன்னைவள் ஓடிவந்தும், 
வரமளித்த காரணத்தால், 
கர்ணன் தோற்றவன்தான்...
காலத்தின் பார்வையிலே...

செஞ்சோற்றுக் கடன் தீர்க்க,
செருக்களத்தை தேர்ந்தெடுத்து,
நண்பனோடு நின்றதனால்,
கர்ணன் தோற்றவன்தான்...
காலத்தின் பார்வையிலே...

பிறப்புண்மை அறிந்ததனால்,
தம்பியரை எதிர்த்திடவே,
தனக்குள்ளே தோற்றதனால், 
கர்ணன் தோற்றவன்தான்...
காலத்தின் பார்வையிலே...

எதிரெதிராய் நின்றாலும், 
இறையவனின் மொழிதனிலே, 
தர்மமதை ஏற்றதினால்,
கர்ணன் தோற்றவன்தான்...
காலத்தின் பார்வையிலே...

ஆம்!
கர்ணன் தோற்றவன்தான்!
காலத்தின் பார்வையில்...
ஆனால்...
கர்வம் கொள்கிறேன்....
கர்ணனவன் தோல்வியை எண்ணி!!

உங்கள், 
✍️ கவிஞர் விஜயநேத்ரன்
Copied!
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

கண்ணனும் கர்ணனும் : பிறப்பிலிருந்து இறப்பு வரை

Copied!
கவிஞர் விஜயநேத்ரன்

கண்ணன் உரைத்த கீதை : விஜயனின் வரியில் நிறைவுப்பகுதி

கவிஞர் விஜயநேத்ரன்

அகிலம் போற்றும் அர்ச்சுனன் : பாரதப் போரின் முதன்மை நாயகன்

கவிஞர் விஜயநேத்ரன்

கட்டுண்ட கண்ணன் : இதயத்தின் அன்பில் சிறைப்பட்ட கிருஷ்ணன்

கவிஞர் விஜயநேத்ரன்

வேள்வியில் உதித்த திரௌபதியின் சுயம்வரம்

கவிஞர் விஜயநேத்ரன்

சக்கர வியூகத்தில் அபிமன்யூ : தனியொருவனாய்ப் பிரகாசித்த இளஞ்சூரியன்