தரணியை ஆண்டவன்
தலைமகன் நேசத்தால்
தன்னிலை மறந்ததால்
தான் துயரடைந்தனன்
திருதராஷ்டிரனே!
விதி செய்த தவறால்
பலி கொண்ட உயிரால்
மறுப்பிறப்பெடுத்து சுமந்தான்
மதியூகி விதுரனே!..
சரம் தொடுத்து உயிர் பறித்து-முனிவன்
வரம் கிடைத்து உயிர்விடுத்தான்
பாண்டு எனும் மாவீரனே!...
கணை துளைத்தும்
கண் மூடமறுத்து - தர்மத்திற்காக
காத்து கிடந்தவன்
கங்கை மைந்தன் பீஷ்மனே!
சொல்ல முடியா அன்பினால்
சொல்லிட்டப் பாடத்தால் - சீடன்
சொன்ன பொய்மெய்யினால்
துறந்தான் வாழ்க்கையை
துரோணன் அவனே!
கேட்டதும் கொடுத்தான்
கேசவன் துகிலை - அவன்
கேட்டும் மறுத்தான்
துரியோதனன் அவன்
தூசி இடத்தை!
துகில் தொட்டதால்
தன்னுயிர் விட்டவன்
துச்சாதனனே!
தொடை மறைத்ததால்
படை எடுத்ததால் - உயிர்
விடை பெற்றவன்
துரியோதனனே !
களத்தினில் கௌரவர் குலமழித்து
குருதியால் பாஞ்சாலி சிகைமுடித்து
பலத்தினால் தாழ்ந்துயர்ந்தவன்
வாயு மைந்தன் பீமனே
தர்மத்திற்கு முரணாய்
தாயம் உருட்டியதால் - உதிர
சாயம் போய் மாண்டவன்
சகுனி யவனே
ஆதி மட்டுமறிந்து
அடுத்தநிலை அறியாமல்
மண்ணில் வீழ்ந்தவன்
மாவீரன் அபிமன்யூவே!
பரிபாஷை தெரிந்தவன்
பார்வையில் பேரழகன்
அஸ்வினி குமாரன் அருளால்
அகிலத்தில் நகுலனே!...
சகலமும் உணர்ந்த சாஸ்திர வித்தகன்
கண்ணன் அருளால் கட்டுண்டு கிடந்தவன்
கர்ணனின் பிறப்பறியா சகாதேவனே
கவசம் இழந்ததால்
கரம் கொடுத்ததால் - குரு
சிரம் படுத்ததால்
களம் வீழ்ந்தனன்
கதிரவன் மைந்தனே!
அதர்மம் புரிந்ததால்
அறம் மறந்ததால் - பாண்டவரை
புறம் தடுத்ததால்
சிரத்தை இழந்தவன்
செயத்ரதன் அவனே!
கண்ணனைத் தொழுததால் - அவன்
கர்மத்தை செய்ததால் - விஸ்வ
காட்சி கண்டதால்
களம் வென்றவன்
காண்டீபன் அவனே!
தன் நிலை இழந்தாலும்
தடை பலவந்தாலும்
தர்மம் காத்ததால்
தரணி பெற்றவன்
தருமன் அவனே!
பார் சுமை குறைத்திட
பாண்டவர் வென்றிட
பாரதம் எழுதியவன்
பரமாத்மா தானென்ற
பார்த்தசாரதி அவனே!
தலைமகன் நேசத்தால்
தன்னிலை மறந்ததால்
தான் துயரடைந்தனன்
திருதராஷ்டிரனே!
விதி செய்த தவறால்
பலி கொண்ட உயிரால்
மறுப்பிறப்பெடுத்து சுமந்தான்
மதியூகி விதுரனே!..
சரம் தொடுத்து உயிர் பறித்து-முனிவன்
வரம் கிடைத்து உயிர்விடுத்தான்
பாண்டு எனும் மாவீரனே!...
கணை துளைத்தும்
கண் மூடமறுத்து - தர்மத்திற்காக
காத்து கிடந்தவன்
கங்கை மைந்தன் பீஷ்மனே!
சொல்ல முடியா அன்பினால்
சொல்லிட்டப் பாடத்தால் - சீடன்
சொன்ன பொய்மெய்யினால்
துறந்தான் வாழ்க்கையை
துரோணன் அவனே!
கேட்டதும் கொடுத்தான்
கேசவன் துகிலை - அவன்
கேட்டும் மறுத்தான்
துரியோதனன் அவன்
தூசி இடத்தை!
துகில் தொட்டதால்
தன்னுயிர் விட்டவன்
துச்சாதனனே!
தொடை மறைத்ததால்
படை எடுத்ததால் - உயிர்
விடை பெற்றவன்
துரியோதனனே !
களத்தினில் கௌரவர் குலமழித்து
குருதியால் பாஞ்சாலி சிகைமுடித்து
பலத்தினால் தாழ்ந்துயர்ந்தவன்
வாயு மைந்தன் பீமனே
தர்மத்திற்கு முரணாய்
தாயம் உருட்டியதால் - உதிர
சாயம் போய் மாண்டவன்
சகுனி யவனே
ஆதி மட்டுமறிந்து
அடுத்தநிலை அறியாமல்
மண்ணில் வீழ்ந்தவன்
மாவீரன் அபிமன்யூவே!
பரிபாஷை தெரிந்தவன்
பார்வையில் பேரழகன்
அஸ்வினி குமாரன் அருளால்
அகிலத்தில் நகுலனே!...
சகலமும் உணர்ந்த சாஸ்திர வித்தகன்
கண்ணன் அருளால் கட்டுண்டு கிடந்தவன்
கர்ணனின் பிறப்பறியா சகாதேவனே
கவசம் இழந்ததால்
கரம் கொடுத்ததால் - குரு
சிரம் படுத்ததால்
களம் வீழ்ந்தனன்
கதிரவன் மைந்தனே!
அதர்மம் புரிந்ததால்
அறம் மறந்ததால் - பாண்டவரை
புறம் தடுத்ததால்
சிரத்தை இழந்தவன்
செயத்ரதன் அவனே!
கண்ணனைத் தொழுததால் - அவன்
கர்மத்தை செய்ததால் - விஸ்வ
காட்சி கண்டதால்
களம் வென்றவன்
காண்டீபன் அவனே!
தன் நிலை இழந்தாலும்
தடை பலவந்தாலும்
தர்மம் காத்ததால்
தரணி பெற்றவன்
தருமன் அவனே!
பார் சுமை குறைத்திட
பாண்டவர் வென்றிட
பாரதம் எழுதியவன்
பரமாத்மா தானென்ற
பார்த்தசாரதி அவனே!