அப்பா....
இது வெறும் ஒரு வார்த்தை அல்ல...
கிடைக்கப் பெற்றவர்கள்
அதிஷ்டசாலிகள்....
அழைக்கப் பெற்றவர்கள்
பாக்கியசாலிகள்...
பலருக்கும் அதுதான் தன்னம்பிக்கை...
சிலருக்கு அது மட்டுமே நம்பிக்கை....
நாட்கள் செல்ல செல்ல
நங்கூரமாய் நிலைத்து விடுகிறது....
பாசக் கயிற்றால் பிணைக்கப்படுகிறது.....
அப்பாவிற்கும் மகளுக்குமான உறவு....
மகளின் உலகில் அப்பா மட்டுமே
கதாநாயகன்....
அப்பாவின் உலகில் மகளே
என்றும் இளவரசி...
ஆனால் சற்றே வித்தியாசமானது...
மகனுக்கும் தந்தைக்குமான உறவு..
நெருங்கி நின்று நெஞ்சில் தவழும்
குழந்தை பருவத்தில்....
சற்றே விலகி சமரசம் பெறும்
விளையாட்டுப் பருவத்தில்....
முற்றும் விலகியதாய் ஒரு பிம்பம்
இளைஞனாய் மாறும் போது....
அப்பாவுக்கும் மகனுக்குமிடையில்
காரியதாசியாகி விடுகிறாள்...
அம்மா....
மகனின் சாப்பாடு முதல் சகலமும்
அம்மாவின் வழியாகத்தான்
அப்பாவை சென்றடையும்....
ஆனாலும் அதற்குள் இருக்கும் பிணைப்பு
ஆழமானது...
கரம் பிடித்து நடை பழகியது
நெஞ்சிலிருக்கும்...
அவர் தோள் சாய் ஆசையிருக்கும்..
கட்டியணைத்து முத்தமிட, முத்தம் பெற
கடலலளவு ஆசைகள் உள்ளத்திலிருக்கும்...
ஆனாலும் உள்ளுக்குள் சண்டையிட்டு
உள்ளுக்குள்ளேயே உறங்கி போகும்...
அது
என்றோ ஒரு நாள் நிறைவேறும்
என்று சிலரும்....
என்றாவது நிறைவேறுமா என்பது பலரும்....
கடந்து போகிறோம் கனக்களுடன்....
என்றோ ஒரு நாள் இந்த கரை உடையும்...
அன்று அப்பா என்ற சமுத்திரத்தில்
நாங்களும் இணைவோம்...
கடல் சேரும் நதியாய்...
அதுவரை சொல்லிக் கொள்வோம்...
பெருமையுடன்...
இவன் என் மனகென்றும்...
இவர் என் தந்தை என்றும்...
ஒருவருக்கொருவர் தெரியாமல்....
தாயுமானவனாய் நெஞ்சில் சுமக்கும் தந்தையருக்கு
#தந்தையர்தின நல்வாழ்த்துக்கள்.
உங்கள்.
✍️ கவிஞர் விஜயநேத்ரன்
#இனிய தந்தையர் தினம்
#தந்தையர்_தின_நல்வாழ்த்துக்கள்