Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

பச்சிளங் குழந்தையாகும் காதலின் முத்தங்கள்

Copied!
Kavignar Vijayanethran

பச்சிளங்குழந்தையாகும் காதலின் முத்தங்கள் 

கணக்கு வழக்குகள் இல்லை
காதலின் முத்தங்களில் மட்டும்...

அடம்பிடிப்பதிலும் 
அள்ளிப் பருகுவதிலும்,
சின்னஞ்சிறு குழந்தைதான்.
காதலும், காதல் முத்தங்களும்..

உன்னிரு கரமதைக் சேர்த்து 
உள்ளங்கை விரல் சேர்த்திடும்
பின்னங்கை முத்தங்களோ..

கட்டியணைத்து மூச்சுக்காற்றோடு
காதருகினில் ஒன்றாகக் கிடைக்கும்
கழுத்தோர முத்தங்களோ..

உன்னைவிட  பெரிதென்று
உலகிலே இல்லைவொன்றென
நெற்றியின் நடுவில் தரும் 
நிகரற்ற முத்தங்களோ..

இதழோடு இதழாகச் சேர்த்து 
இதயங்கள் ஒன்றாகக்கூடும் 
இணையற்ற  முத்தங்களோ...

இருவரும் ஒருவராய்,
இணைகின்ற பொழுதிலே, 
தொடுகின்ற இடமெல்லாம் 
தருகின்ற முத்தங்களோ...

எத்துனை கொடுத்தாலும், 
இத்தனை தானாவெனக் கேட்கும் 
பச்சிளங்குழந்தை தானடா...
நானும் என் காதலும்....
உன் முத்தங்களில்..

✍️ கவிஞர் விஜயநேத்ரன்
Copied!
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

காதலின் உயர்நிலை : காலத்தை வெல்லும் காதல்

என்ன செய்தாயடா கள்வனே என்னை!!! ✍️ கவிஞர் விஜயநேத்ரன்

Copied!
கவிஞர் விஜயநேத்ரன்

இரசித்திடுவோம் இந்த நொடிதனை...

கவிஞர் விஜயநேத்ரன்

தொலைதூரக் காதல் : அசலைப் பிரதிபலிக்கும் பிரதிகள் ✍️ கவிஞர் விஜயநேத்ரன்

கவிஞர் விஜயநேத்ரன்

ஆணி வேர் வீழ்ந்தாலும் அடையாளம் மாறிடுமோ??.. ✍️ கவிஞர் விஜயநேத்ரன்

கவிஞர் விஜயநேத்ரன்

ஆனந்த யாழ் மீட்டிய அற்புத மகள் - நீயா நானா சிறப்பு கவிதை ✍️ கவிஞர் விஜயநேத்ரன்

கவிஞர் விஜயநேத்ரன்

காட்சிகள் ஒரு விதம் காண்பது பலவிதம் - ✍️ கவிஞர் விஜயநேத்ரன்