Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

மாமன்னர் இராஜராஜ சோழன் : ஐப்பசி சதய அவதாரத் திருநாள் - சிறப்பு கவிதை

Copied!
Kavignar Vijayanethran

மாமன்னர் இராஜராஜ சோழன் - ஐப்பசி சதய அவதாரத் திருநாள் 

அழகிய தோற்றமதில் முருகன் - பெரும்
ஆற்றலில் குறைவில்லா மாயோன் - போர்க் 
களமதில் இறங்கிவிட்டால் கொற்றவை - செங்
கரத்தினால் கொடுப்பதில் பேதமில்லா வருணன்
சுந்தரன் பெற்றெடுத்த இந்திரன் - புது
சோழத்தை நிர்மாணித்த மந்திரன்.

ஐப்பசி சதயத்தில் அவதரித்து - தில்லை
அருந்தமிழ் பதிகமதை மீட்டெடுத்தான்...
அருள்மொழி வர்மனென்னும் பெயர் மாற்றி - உலகை
ஆளுகின்ற ராஜராஜன் என்றுயர்ந்தான்.. 

உத்தமனை அரியணையில் ஏற்றி வைத்தான் - அந்த 
உள்ளன்பால் புதல்வனுக்கவன் பெயரை வைத்தான் 
சத்திரியசிகாமணியாய்ச் செயங்கொண்டான் - புது
சரித்திரம் படைப்பதற்கே உரிமை பூண்டான் 
உடன்பிறந்த தமையனுக்காய்க் கலமறுத்தான் -  தீர்ப்பினை
உடையார்குடியதனில் கல்லில் பொறித்தான்
விஜயலாயனின் கனவதற்கு உருக்கொடுத்தான் - கொண்ட
வீரத்தில் கரிகாலனிற்கு உயிர் கொடுத்தான்.
மூவேந்தர் முடியதனை ஆட்சி செய்தான்  - மண்ணில்
மும்முடிச்சோழனெனப் பெயரெடுத்தான்...
 
கொடுஞ் சாளுக்கரை வீரத்தினால் ஓடவைத்தான் - தொடர்
கொல்லம் முதல் கலிங்கம் வரை கால்பதித்தான்.
வேங்கைநாட்டில் போர்தொடுத்து வேரறுத்தான் - அந்த
கங்கைத் தடிகை நுளம்பபாடியையும் வென்றெடுத்தான்..
வெகுண்டெழுந்து குடமலையில் போர்தொடுத்தான் - அந்த 
வெற்றியினால் தூதுவனை மீட்டெடுத்தான்.
பொன்னெழில் ஈழமதை அழித்தெடுத்து - அதில்
பொலன்னறுவை தலைநகராய்ப் புணரமைத்தான்.
ஒட்டக்கூத்தன் தமிழதிலே உலா கண்டான் - உயர் 
ஒப்பற்ற பரணியிலும் வெற்றி பவனி வந்தான். 

 நிசும்பசூதனியின் அருளைப் பெற்றான் - அதனால்
நிகரிலி சோழனெனப் புகழைப் பெற்றான்
கயிலையின் ஈசனைத் தினம் தொழுதான் - அவனுக்குக் 
கல்லினால் உயர்ந்தோர் மனையும் செய்தான். 
வைணவம் தழைக்கவும் கொடைகள் தந்தான் -  பௌத்த 
விகாரங்கள் எழுப்பியும் மனதில் நின்றான்
வரியதை விதிப்பதற்கு உலகளந்தான் - தான்
வழங்கிடும் நீதியதைக் கல்வெட்டாய்ப் பதித்தான் 
பொற்கால ஆட்சியதை மண்ணில் கொடுத்தான் - புகழ் 
பொன்னியின் செல்வனென மனதைப் பறித்தான்...

கங்கையைத் தடுத்துக் கரையினை எழுப்பி 
செஞ்சடையதன் மேலொரு அணியாய்,
மங்கலப்பிறையை மலராய்ச் சூடிய
வேங்கையிடை உடுத்திய ஈசனுக்கு,
தஞ்சை மண்ணதன் மேலாலயம் எழுப்பி 
தமிழனின் புகழைத் தரணியில் உயர்த்திய,
அழகியசோழன் அரித்துர்கலங்கன்,
அறிவில் சிறந்த அபயகுலசேகரன்,
நித்ய விநோதன் சத்ருபுஜங்கன், 
ரவிவம்ச சிகாமணி ரணமுகபீமன், 
சிங்கனாந்தகன் சிவபாதக சேகரன்,
பண்டிதசோழன் சண்ட பராக்கிரமன் 
கோப்பரகேசி மும்முடிச் சோழனாய் முடிசூடி 
ஐப்பசி சதயத்தில் பிறந்த அருண்மொழிவர்மரே!!
வையத்தில் வாழ்வோர் இதயத்தில் வாழ்வீர்...
நீர் என்றும்!!!! நின் தமிழால்!!! நின் தமிழாய்!! 

✍️ கவிஞர் விஜயநேத்ரன்
Copied!
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

இராஜேந்திர சோழன்: பார் போற்றும் தமிழ்வேந்தன்

ஒற்றை ஆளாய் வெற்றிவாகை சூடிய ஒண்டிவீரன்

Copied!