தங்கமகனே தலைவணங்குகிறேன்...
இறுதியாய் ஒரு தங்கம்...
மன உறுதியால் ஒரு தங்கம்...
கடைசி நாள் வரைக்கும்
காத்திருந்த உள்ளங்களுக்காக,
இறுதியாய் ஒரு தங்கம்...
மன உறுதியால் ஒரு தங்கம்...
வரலாற்றுச் சுவடுகளில்
தடம் பதித்து தந்திருக்கிறார்...
தனியொருவனாய்..
தங்க மகனொருவன்...
முதல் தங்கத்தை...
மொத்த தேசத்திற்கும்...
வெள்ளியும் வெண்கலமும்
அவ்வப்போது கிடைத்தாலும்,
தங்கத்தின் கனவு மட்டும்,
கனவாகவே இருந்தது....
கைக்குக் கிட்டாமல்,
கனவிற்கும் எட்டாமல்,
எட்டாக்கனியான தங்கத்தை
எட்டிப் பிடித்து தந்திருக்கிறான்..
தனியொருவனாய்..
தங்க மகனொருவன்...
ஈட்டிகள் எறிந்தால்,
இதயங்கள் காயப்பட்டு,
உதிரங்கள் சிந்துமென்பது
இயற்கையின் நியதி..
நீ எறிந்த ஈட்டியால்,
இதயங்கள் திளைக்கிறது..
இந்தியாவே மகிழ்கிறது..
இது நீ படைத்த தியதி...
நீரஜ் சோப்ரா,
நீ நடந்த வந்த பாதைகளில்,
கற்களும் முட்களும்,
இருந்திருக்கலாம்...
நீ சுமந்த வந்த கனவில்,
வலிகளும் வேதனைகளும்
கலந்திருக்கலாம்...
ஆனால்,
உன் வெற்றியில்,
ஒட்டு மொத்த தேசமும்
உயிர்த்து எழுந்திருக்கிறது...
தேசத்தின் கனவொன்றுநினைவானது
மொத்த தேசத்தின் கனவின்று நினைவானது...
அந்தக் கனவினை நினைவாக்கி,
பல கனவுகளுக்குப் உருக்கொடுத்திருக்கிறாய்...
ஆம்..
உன் வெற்றி கண்டு,
உன் சுவடுகளில் பயணிக்க,
நாளைய தலைமுறை முயற்சிக்கலாம்..
அந்த முயற்சியின் முடிவில்,
இன்னும் பல தங்கம் கிடைக்கலாம்...
இந்திய தேசத்திற்கு...
தேசத்தின் தங்க மகனே...
தலை வணங்குகிறேன்...
நீ வாழ பல்லாண்டு...
பலர் வாழ்த்த பல்லாண்டு...