சூர்யா பிறந்தநாள் கவிதை : அகரம் தந்த அண்ணனுக்கு அன்பில் ஒரு கவிதை
அகரம் என்னும் கரம் தந்து - வாழ்வில் பலர்
சிகரம் தொட உதவும் அண்ணனுக்கு
அவர் அகவை தினத்திலொரு அன்பளிப்பு..
அதுவே இந்த கவியளிப்பு..
நீ நடித்த நாற்பதையும்,
உனக்காக நானளிக்கிறேன்..
வாழ்த்தாய்.. கவிதையாய்...
நேருக்குநேர் நின்று அன்போடு சந்திப்போமா என்று கேட்டவன்
பெரியண்ணா வின் அரவணைப்பில் காதலே நிம்மதி என்றவன்
பூவெல்லாம் கேட்டுப்பார்த்து நம் உயிரிலே கலந்து நிற்பவன்
ஃப்ரெண்ட்ஸ் என்று உன்னை நினைத்துப் உண்மையாய்ப் பழகியவன்.
ஸ்ரீ என்று சிறப்புடன் மௌனம் பேசிய(து) பேரழகன்
காக்க காக்க என்று கல்வியை வேண்டித் தவித்த மாணவர்க்கு
கரம் கொடுத்து கரை சேர்த்த மாபெரும் பிதாமகன்
ஆய்த எழுத்து அதிலும் வசந்தங்கள் தந்த தந்திர மாயாவி
ஆறு முறையல்ல... ஆயிரம் முறையென்றாலும்
முயற்சியில் தளராது முன்னேற்றம் படையெடுக்கும் அபூர்வ கஜினி
ஜூன் ஆர்ரிலும் சில்லுனு ஒரு காதல் செய்யும் குசேலன்
வாரணம் ஆயிரம் எதிர்நின்றாலும்,
வெற்றிவேல் என்று வென்று காட்டும் ஆதவன்
வாழ்வில் சிங்கம் என புறப்பட்டு இரத்தசரித்திம் எழுதிய அயன்
அவன் இவன் என்றாலும் மன்மத அம்பு வீசிக் கவரும் பெருங் கோ இவன்
அதில் மாற்றான் என்று மனதில் வெறுத்து நின்றாலும்
அற்புத ஏழாம் அறிவு -ஆல் அன்பு காட்டும் அஞ்சான்
சென்னையில் ஒருநாள் நினைத்தது யாரோ என்றாலும்
அவரைத் தேடிச் சென்று உதவும் மாசு (எ) மாசிலாமணி
அன்பினால் தன்னுடன் தானா சேர்ந்த கூட்டம் அதையும்,
பசங்க 2 பேருக்காவது கல்வியில் உதவிடச் சொல்வதோடு,
அதை 24 மணி நேரமும் நினைத்து செயலாற்றும் கடைக்குட்டி சிங்கம்
நந்த கோபாலன் குமாரன் போல நன்மைகள் பல செய்து,
அகரத்தால் அவரனைவரையும் கதிரவனாய்க் காக்கும் காப்பான்.
தனக்கு தவறென்று தோன்றுவதை,
எதற்கும் துணிந்தவன் என்று சுட்டிக்காட்டும் சூரரைப் போற்று கிறேன்...
எங்கள் சூர்யாவைப் போற்றுகிறேன்...
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சூர்யா அண்ணா...
அகவை தின நல்வாழ்த்துகளுடன்
✍️ கவிஞர் விஜயநேத்ரன்