மகேந்திர சிங் தோனி : கிரிக்கெட்டின் உலகநாயகன்
கிரிக்கெட்..
இது விளையாட்டு மட்டும் இல்லை....
இந்தியர்களின் உணர்வுகளில் கலந்த ஒன்று...
அந்த உணர்வுக்கு உரமூட்டி, தேசத்திற்காக வெற்றியைப் பெற்றுத்தரும் ஒவ்வொரு வீரனும் இங்கே நாயகன் தான்...
உள்ளூரில் வெற்றி பெறவே தடுமாறிய அணியை இங்கிலாந்திற்கு அழைத்துச் சென்று உலகக் கோப்பையை வென்று வந்து, கபில்தேவ் அன்று இதயங்களில் விதைத்த விதை...
இன்று
அசாருதீன்...
சச்சின்...
கங்குலி..
டிராவிட்..
எனத் தொடங்கி,
கோஹ்லி , ரோஹித்
என பெரும் விருட்சமாய்,
துளிர்த்து வளர்ந்து பரந்து நிற்கிறது....
நம் இதயங்களில்...
நாயகர்கள்
ஆயிரம் வருவார்கள்..
நன்றாக ஆடுவார்கள்..
வெற்றியும் தருவார்கள்...
புகழோடு விடை பெறுவார்கள்...
ஆனால்...
நாயகர்களின் நாயகனாய்
தோல்விகளில் துவழும் போது துணையாய்,
களத்தில் தடும்மாறும் போது வழிகாட்டி,
அணிக்குத் தலைமையேற்று,
அத்தனைக்கும் முழுப்பேற்று,
கரைசேர்ப்பவன் உலகநாயகன் என்றால்,
அதன் பெயர் மகேந்திர சிங் தோனி...
இந்திய கிரிக்கெட்டில் பொன்னெழுத்துக்களால் பொறித்துப் போற்றப்பட வேண்டிய பெயர்...
சச்சின், பாண்டிங், கில்கிறிஸ்ட், பெவன் இவர்கள் சாதிக்காத எதை அப்படி இவர் சாதித்து விட்டார்.
உலகநாயகன் என்று சொல்லும் அளவுக்கு...
சிலர் உள்ளத்தில் வினா எழலாம்...
சிலர் வார்த்தையில் வசை பாடலாம்...
அவதூறுகளை ஆயிரம் பேசி
அவரைத் தூற்றிப் பதிவிடலாம்...
ஆனால் அதற்கெல்லாம் பதில்...
அந்த ஒற்றைப் புன்னகைதான்...
அது சொல்லும் ஆயிரம் பதில்களை..
சச்சினைப் போன்று ஒருவர் ரன் குவிக்கலாம்..
கில்கிறிஸ்டைப் போல ஒருவர் விக்கெட் கீப்பிங்கில் அசத்தலாம். அதிரடியில் மிரட்டலாம்..
பெவனைப் போல ஆட்டத்தை சிறப்பாக முடித்துக் கொடுக்கலாம்...
பாண்டிங்கை விட சிறப்பாக அணியையும் வழிநடத்தலாம்..
எல்லாம் நடக்கும்..
தனித்தனியாக...
அதை ஒன்றாய்ச் செய்த நாயகன்தான்..
மகி என்னும் மகேந்திர சிங் தோனி....
கிரிக்கெட்டின் உலகநாயகன்..
ஆம்...
டாப் ஆர்டரில் களமிறங்கி அசத்தலாய் ரன் குவித்தார்.
மிடில் ஆர்டரில் இறங்கி பொறுப்பாகவும் ரன் சேர்த்தார்...
லோயர் ஆர்டரில் இறங்கி பாதுகாப்பாய் கரையும் சேர்த்தார்...
விக்கெட்டுகளுக்குப் பின்னால் மின்னலாய்ச் செயல்பட்டார்...
இருபது ஓவர் உலகக் கோப்பை...
ஐம்பது ஓவர் உலகக்கோப்பை....
சாம்யின்ஸ் டிராபிக் கோப்பை.
டெஸ்ட் தரவரிசையில் முதலிடமென
ஐசிசியின் அத்தனை கோப்பைகளையும் வென்று தந்த கேப்டன்...
டாப் ஆர்டரில் டாப் கிளாஸில் ஆடிய போதும், அணிக்காக பினிஸர் ரோலை ஏற்றுச் சிறப்பாய் செய்தவர்...
கடைசி ஓவரில் 20 ரன்களுக்கு மேலாக இருந்தாலும்...
கடைசிப் பத்து வரைக் காத்திருக்கும் நம்பிக்கையை விதைத்தவர்..
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே,
அணியில் பாதி பெவிலியன் வந்தாலும்,
அசராமல் களத்தில் நங்கூரமிட்டு,
அணியின் கறை துடைத்து,
ஆழ்கடலில் மூழ்காமல் கரை சேர்க்கும்...
தோனி தான் அவர்....
அங்கொன்றும் இங்கொன்றுமாய்..
சில ஆட்டங்களை முடிக்க இயலாமல் போயிருக்கலாம்..
சில ஆட்டங்களில் மோசமாக ஆடியிருக்கலாம்....
சில முடிவுகள் தவறாய் எடுத்திருக்கலாம்...
ஆனாலும் களத்திலிருந்த வரை,
எதிரணியின் வெற்றிக்குக் குறுக்கே நின்றது....
தோனியாக மட்டுமே இருக்கும்...
டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடுபவர் என்று சிலர் வசைபாடி,
தோபி என்ற ஒரு கூட்டம் சேற்றை வாரி இறைத்துக் கொண்டு இருக்கிறது....
நீங்கள்
உணர வேண்டியதெல்லாம் ஒன்றுதான்..
நீங்கள், அவர் தவறிழைத்த சில போட்டிகளைச் சாட்சியாய்த் தூக்கிப் பிடிக்கிறீர்கள்...
நாங்கள், அவர் கரைசேர்த்த பல போட்டிகளை எண்ணிப் போற்றிப் புகழ்கிறோம்...
சில பெயர்கள் வரலாற்றில் இடம் பிடிக்கும்...
சில பெயர்கள் வரலாறாய் இருக்கும்...
தோனி..
அப்படி வரலாறாய் என்றும் இருக்கும் பெயர்...
சச்சின் அவுட் ஆனால் டீவியை நிறுத்தியவனை
கடைசிப் பந்து வரைக் காண வைத்த மாயாவி...
ராஞ்சியிலிருந்துப் புறப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் இவன்...
கிரிக்கெட்டில் பல மாற்றம் செய்து எக்ஸாம்பிளாய் நிற்பவன் இவன்...
யார்க்கர்களையும் ஹெலிக்காப்டராக்கி
சிக்சருக்குப் பறக்கவிட்டு
கிரிக்கெட்க் போர்க்களங்களைக் கூலாய் வென்ற வீரன் இவன்
மின்னல் ஒளியை மிஞ்சிய ஸ்டம்பிங்
இவனுக்கு வாடிக்கை....
ஸ்டம்பிற்கு பின்னால் நின்றால் பேட்ஸ்மேனுக்கு
காட்டுவான் வேடிக்கை...
முதல் தொடரிலியே உலகக் கோப்பையை முத்தமிட்ட புத்திசாலி...
மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்ற
இராஜ தந்திரி
களம் கண்டால் அரங்கம் அதிரும்
இவன் பெயர் சொல்லி...
பலம் அறிந்து கணித்து அடிக்கும்
கிரிக்கெட்டின் அறிவாளி
"தல" எனும் ஒற்றை சொல்லை
தனதாக்கிக்கொண்ட போராளி...
"மலை" என இவனைக் கண்டால்
கலங்கி நிற்பான் எதிராளி...
இலக்குகளைத் துரத்தி வெல்வதில்
இவன் என்றும் கில்லி
இலக்கணங்களை மாற்றி வென்று
சரித்திரம் படைத்த கிங் மேக்கர்
ரன்ரேட்டை கணக்கிட்டு அடிக்கும் கால்குலேட்டர்....
வின்ரேட்டை மெனக்கெட்டு
துரத்தும் ஆக்ஸிலரேட்டர்....
ஸ்டம்பிற்கு பின்னால் நிற்கும் டெர்மினேட்டர்...
ஸ்டம்பிங்கில் இவன் வேகம்
லைட்னிங் க்யூக்கர்...
போராடத் துடிப்பவனின் இதயத்திற்கு
இன்ஸ்பிரேட்டர்
வேரூன்றி வென்று நிற்கும் கிளாடியேட்டர்.
இந்திய கிரிக்கெட்டை ஏற்றி வைத்த
ஏணி....
இந்தியாவே புகழ்பாடும் எங்கள் தோனி
தோனி....
கிரிக்கெட் ரசிகனுக்கு இது ஒரு மந்திரச் சொல்...
தடம் மாறிச் சென்ற அணியை முதலிடம் மாறச் செய்த ஏணி
தடுமாறி மாறி நிற்கும்போதெல்லாம்
துடுப்பாடிக் கரை சேர்க்கும் தோனி
கடைசி வரைப் போராடும் களப் போராளி
களத்தில் இவன் நின்றாலே கலங்குவான் எதிராளி
கங்குலி கண்டெடுத்த இலக்குவன் - அவன்
கனவுகளை நிறைவேற்றுவதிலே இலக்காய் இவன்..
இலக்கணங்களை உடைத்தெறிந்த புதிராளன்
இலக்குகளை விரட்டுவதில் பதிலாவான்..
தலைக்கணம் சுமக்காத மாவீரன்...
தலைமையில் நீ என்றும் "கேப்டன் கூல்"
போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்...
உன் புகழ் வையத்தில் வாழும்...
என்றென்றும்...
தலைசிறந்த தலைவனாய்...
தசவதாரம் படத்தில் பூவராகன் வேடத்தில் கமல் சொல்லும் வசனம் தான்....
தோனி என்ன பெரிய உலகநாயகனா...
ஆமாலே...
தோனி உலகநாயகன் தான்...
கிரிக்கெட்டை நேசிக்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் தோனி உலகநாயகன் தான்...
வாழ்த்துகளுடன்,
✍️ கவிஞர் விஜயநேத்ரன்..