Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

சாண்டில்யனின் கடல்புறா : ஒரு பிரமாண்ட கடல்பயணத்தின் அனுபவம்

Copied!
Kavignar Vijayanethran

கடல்புறா - சாண்டில்யன் :  ஒரு பிரமாண்ட கடல்பயணத்தின் அனுபவம் 

கலமேறியொருக் கடல் பயணம்
கதை வழியே போக முடியுமா.?? 

அந்தக் கதையோடு ஒன்றாகிக்
காதலதில் திளைக்க முடியுமா???

நொடிக்கு நொடி சாகசத்தில் 
நெஞ்சமது துடிக்க முடியமா??

வார்த்தைகளில் பிரமாண்டத்தை 
வரிக்கு வரி உணர முடியமா?? 

உணர்ந்த அந்த உலகமதை 
உன் விழியில் காணமுடியுமா???

மறவாத பயணமதை நினைத்து
மனதுக்குள்  குதூகலிக்க முடியுமா??

அத்தனையும்  முடியும்...
ஒற்றைப் புத்தகத்தில்.. 
ஆம்...

கடல்புறா அதில் 
நீங்கள் பயணித்தால்... 
 
இதயத்தை பத்திரப்படுத்துங்கள்..
கொள்ளை அடிக்கப்படலாம்...
இதிலெங்கேனும்...

கற்பனைச் சிறகுகளை 
கட்டுப்படுத்தி வையுங்கள்..
காதலில் பறந்து விடலாம்.
இந்தக் கடல்புறாவோடு...

சற்றே தயாராகுங்கள்...

சாண்டில்யன் அளித்த 
சாகசத் திருவிழாவிற்கு 
சென்று வருவோம்
ஒரு சிறு பயணம்... 

கடல் மேல் ஒரு கலம்..
அக்கலமே பெரும்பலம்.
அதன் பெயரோ கடல்புறா..
செல்வோம் நாம் உலா....

உலாவதில் நம்முடன்
உடன் வருவோர் அறிவோமா..

கருணாகரன் பல்லவன் 
இந்தக் கதையின் நாயகன்... 

கதையின் தொடக்கத்தில்
கால் வைத்து நுழைவான் 
கலிங்கக் கரையதில்.. 
சோழர் தரைப்படையதன் 
தலைவனாய்... 
 
கடல்புறாக் கலமேறிக்
கடலோடித்  தலைவனாக,
கடற்கொள்ளைத் தலைவனாக 
கதை நடுவே வலம் வருவான்.. 

மோகத்தில் முத்தெடுத்து 
காதலின் நாயகனாய், 
வெற்றி வீரனாய் வலமிட்டுச்
சிற்றரசனாகி சிறப்புறுவான்...
கதையின் முடிவில்.. 

மந்திரமோ தந்திரமோ 
முத்தமோ மோகமோ
சாகசமோ சரிநிகரோ
அத்தனையும் அத்துப்படி.. 
அதுநடக்குமிவன் இஷ்டப்படி...

சதிகள் சங்கமித்தாலும் 
விதியோடு மல்லுக்கட்டி
மதியால் வென்று நிற்கும்
மாவீரன் இவனாவான்...

நாயகனுக்கினையான 
நாயகி இல்லையென்றால் 
கதையது வலுப்பெறுமா??..
கடல்புறா உருப்பெறுமா??

இதோ நாயகி...
ஒருவரல்ல.. இருவராய்..
இருவரும் இருவேறு துருவமாய்...

கட்டழகி காஞ்சனா
கடாரத்தின் இளவரசி...
துணிச்சலால் இவள் செய்தாள்
பல்லவனின் இதயத்தில் ஆட்சி...
வாளெடுத்து வீசிடுவாள் 
வாய்மொழியும் வீசிடுவாள்...
கோபத்தில் சிங்கமிவள்..
குணத்தால் தங்கமிவள்...
கட்டழகி காஞ்சனா..
கடாரத்தின் இளவரசி.

அடுத்தவள் மஞ்சல் அழகி
அவளே அக்ஷய முனைத்தலைவி..
மோகமும் வீரமும் 
மொத்தமாய் இருக்கும் 
காதலும் கடமையும் 
கண்ணாய் இருக்கும்..
வேகமும் விவேகமும் 
விநாடியில் துளிர்க்கும்..
விதியால் இடம்மாறி இருந்தாலும்
கதையைத் திருப்பும் காரியவாதி. 
சதிகளை உடைத்திடும் சாகசக்காரி..
சங்கமம் ஆகினாள் பல்லவனோடு...
அழகிய மஞ்சள் அழகி 
அக்ஷயமுனைத் தலைவி.

ஆபத்து நேரத்தில் காபந்து செய்வார்.
அன்புத் தோழருக்கு உதவிகள் செய்வார்.
அநாபயச் சோழனென்று பெயரைச் சொல்வார்.
அவரே குலோத்துங்கனாய் மாற்றம் பெறுவார்....

கடலதிலொரு கொள்ளைக்காரன் 
கருணாகரனின் கூட்டுக்காரன்.
ஆழ்கடல்திலதிலொரு மாமேதை
அகூதா என்னும் சீனத்து மாலுமி.. கடற்பயிற்சியதை பல்லவனுக்களித்து 
கடல்புறாவதையவன் உதவிக்களித்து 
அக்ஷய முனையை மீட்டுத்தருபவன் அவனே சீனத்து எதிர்கால அரசன்...
ஆழ்கடல்தில் அவனொரு மாமேதை
அகூதா என்னும் சீனத்து மாலுமி..

அரபு நாட்டின் முரடனிவன் 
அகூதாவின் உதவியாளன் 
இரக்கமனம் நிறைந்து - கதையில் 
இதயமாவான் தொடர்ந்து .. 
கடற்புறாவிற்கு உபதலைவன் 
கருணாகரனுக்கு உற்றநண்பன்...
அமீர் என்னும் பெயர் கொண்டவன்..
அரபு நாட்டின் பெரும் முரடன்..

ஸ்ரீ விஜயம் ஜெயவர்மன் 
சிறு புத்தி மாமன்னன்..
கடாரம் குணவர்மன் 
கனிவான இளவரசன்..
இருவருக்கும் ஒருபிணக்கு
இதுவே நம் கதைப்போக்கு...

கதைமாந்தர் அறிந்துவிட்டோம்...
கதையதைச் சுருக்கமாய் 
காண்போம் சிலவரியில்...

ஆடி பதினெட்டை 
அணுஅணுவாய் 
இரசித்திருப்போம்..
அற்புதத் தொடக்கமாய்
பொன்னியின் செல்வனதில்..

பிறையது முழுநிலவாய் 
பிரகாசிக்கும் முழுநிலவு..
அப்பௌர்ணமியில் சிறந்தது 
அழகான சித்ரா பௌர்ணமி..

அச்சித்திரைப் பௌர்ணமியில் 
காலடித் தடம் பதித்தான்..
கருணாகரப் பல்லவனவன்,
நம் கதையின் நாயகனாய்,
கலிங்கத்தின் பெருந்துறையில்..

அண்ணன் தம்பி சண்டை
அகிலமெங்கும் ஆயிரம்.‌
அதிலொரு சண்டைதான் 
ஸ்ரீ விஜயத்தின் ஜெயவர்மனுக்கும் 
கடாரத்தின் குணவர்மனுக்கும்...

கொடுங்கோலன் ஜெயவர்மன் 
கொன்றிடத் துணிந்தான்.
கடாரத்தின் குணவர்மனை..
கலிங்கத்தின் துணையோடு 
கடலோடும் தமிழனையும்...

கலிங்கமும் ஸ்ரீவிஜயமும் 
கலகம் செய்து கூட்டாக.. 
சோழர் வணிகத்திற்கு
செய்தது பல இடையூறு...

கடாரத்தின் இளவலவன் 
சோழதேச உதவி கேட்க, 
கை கொடுக்க சென்றவனை 
கைது செய்தடைத்தான் 
கலிங்கத்தின் மன்னனவன்...
பலங்கொண்ட பீமனவன்..

அங்கிருந்து ஆரம்பம்  
அளவில்லா சாகசங்கள். 
அங்கங்கு கதைநடுவே 
அழகான திருப்பங்கள்.. 

அவமானமடைந்த பல்லவன் 
அமைத்தான் ஒரு கடற்புறா 
அகூதாவின் உதவியோடு.. 

அதைத் துடைத்தெடுக்க 
எடுத்தான் ஒரு கடல்பயணம்
அமீரின் துணையுடன் ...

அதன் விளைவால், 
முடித்தான் கலிங்கத்தின் 
முடிவில்லா கொட்டத்தை.. 

இடையிலிரு காதல் 
அதனோடு சில மோதல்..
முடிவில் கைகூடல்...

வானளாவும் வர்ணனைகள் 
தேனொழுகும் மோகதாபங்கள் 

நேர்த்தியாய் பல முடிச்சுகள் 
நேரத்தில் அதன் அவிழ்ப்புகள் 

சாகசத்திற்கு குறைவில்லை 
பிரமாண்டத்தின் பெரும் எல்லை... 

இதுவே கடல்புறா...
இதயத்தோடு ஒரு உலா...

மூன்று பாகங்களை....
முடிந்தால் படித்திடுங்கள்..
மொத்தமாய் ருசித்திடுங்கள்...

ஆழ்மனதெங்கும் 
அடித்துக்கொண்டிருக்கும்...
கடல்புறாவின்  நினைவலைகள்..
ஆழிப்பேரலையாய்...

வாழ்த்துகளுடன்.
உங்கள்
✍️ கவிஞர் விஜயநேத்ரன்.
Copied!
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

கவிஞானி நா.முத்துக்குமார்

மகேந்திர சிங் தோனி : கிரிக்கெட்டின் உலகநாயகன்

Copied!
கவிஞர் விஜயநேத்ரன்

நலம் பேணும் நாயகிகள் - செவிலியர்கள்

கவிஞர் விஜயநேத்ரன்

மனிதம் போற்றும் மனதிற்கு பிறந்தநாள் -கேப்டன் விஜயகாந்த் : பிறந்தநாள் பகிர்வு

கவிஞர் விஜயநேத்ரன்

வெற்றியின் வேர்களைத் தோல்வியில் கண்டறியுங்கள்

கவிஞர் விஜயநேத்ரன்

ஏம்மா - கவிஞர் புதியவன் வாழ்வின் வலி பேசும் புத்தகம்

கவிஞர் விஜயநேத்ரன்

மரங்களின் காதலன் விவேக்கிற்கு மனதால் ஒரு வாழ்த்து