
கனவுதேசத்தின் காலண்டரில்
#கற்பனைக்குப் பஞ்சமில்லை....
உறக்கம் கலைந்தாலும்...
கற்பனைக் குதிரைகள்
#பாதைகள் பார்ப்பதில்லை...
முட்கள் இருந்தாலும்.....
பாதையின் பார்வைக்கு
#விளக்குகள் தேவையில்லை...
இருளில் மறைந்தாலும்...
விளக்கின் வீழ்ச்சியால்
#இலக்குகள் புதைவதில்லை....
விடியல் இருண்டாலும்...
இலக்கினை நோக்கிய பயணங்கள்
ஒரு போதும் நிற்பதில்லை....
இடையூறுகள் பல வந்தாலும்....
நானும் தொடர்கிறேன்...
என் பயணத்தை...
கவிதைகள் சூழ்ந்த
என் கனவு தேசத்தை நோக்கி....
என்றேனும் வெல்வேனென்ற
என் #நம்பிக்கையில்
#தன்னம்பிக்கையில்.....
தோழமையுடன்
✍️ கவிஞர் விஜயநேத்ரன்