தேநீர் எங்கள் தேசியபானம்
காலை எழுந்ததும்
கைவிரல்கள் தேடுவது...
சிலருக்கு அலைபேசி..
சிலருக்கு நாளிதழ்.....
பலருக்கும் தேநீர்.....
ஆம்....
இது எழுதப்படாத சட்டம்..
இந்தியாவில்....
காலை எழுந்ததும் கையில் தேநீரென்று.....
உதடுகள் சுவைக்காமல்
உதயமாவதில்லை....
விடியல்கள் இங்கே....
இந்த மூன்றெழுத்து சொல்லே
உயிர் மூச்சாய் சிலர்...
தெருவெங்கும் கடைகளிருந்தாலும்
திருவிழாக் கூட்டம்தான்...
தேநீர்க்கடைகளில்...
கால,நேரக்கணக்குகள் ஏதுமின்றி
கையில் உறவாடிக் கொண்டிருக்கும்....
கோப்பைத் தேநீர்....
இல்லத்தரசிகளுக்கு
இடைவேளை தரும்..
அரசியல் கட்சிகளுக்கு
கூட்டம் சேர்க்கும்....
அலுவலகப் பணியாளர்களுக்கு
பதற்றம் போக்கும்.....
கல்லூரி மாணவர்க்கு
நட்பை வளர்க்கும்...
விஐபி தோழர்களுக்கு
விருந்து வைக்கும்...
தேநீர்....
உழைத்துக் களைத்தவர்களின்
உற்சாக பானம் .....
பிழைப்புத்தேடி அலைபவர்களின்
பசிதீர்க்கும் அமிர்தம்...
மனதின் குழப்பம் முதல்
மண்டையின் வலி வரை
சர்வலோக நிவாரணி
தேநீர்....
இது வெறும் வார்த்தை அல்ல....
இங்கு அதுதான் பலரின் வாழ்க்கை...
ஆம்...
தேநீர் எங்கள் தேசியபானம்...
உங்கள்
✍️கவிஞர் விஜயநேத்ரன்