அதிசயங்களை எல்லாம்
அள்ளித் தெளித்த
ஆண்டவனிடம் சொல்லுவான்
அகிலத்தில் இல்லை
அன்னையை மிஞ்சிய
#அதிசயம் ஒன்று....
தினம் தோறும் நோன்பிருப்பாள்
திங்கள் பத்து நம்மை சுமப்பாள்
அறுசுவை உணவிருந்தும்
அவள் மட்டும் காத்திருப்பாள்
பிள்ளை வரவை எண்ணி
பிறை நிலவாய் தேய்ந்திடுவாள்..
உலகின் உயிர்க்கெல்லாம்
உண்ணும் வயிறு ஒன்றே
உனக்கு மட்டும் எப்படி
உண்டானது இரண்டாம் வயிறு..
உன் பசியை மறந்திடுவாய்
என் பசியை அறிந்திடுவாய்...
அர்த்தமற்ற என் சத்தத்திற்கும்
அர்த்தம் நீ மட்டும் உணர்ந்திடுவாய்
பாசை இல்லா மொழியை எல்லாம்
பாசம் கொண்டு தெரிந்திடுவாய்..
விஞ்ஞானத்திற்கும் விளங்காது
மெய்ஞானிக்கும் புரியாது
அஞ்ஞானம் என்னவென்று
அம்மா நீ மட்டுமே
அறிந்திடுவாய்...
உன்னுள் என்னை சுமந்தாய்
உதிரத்தை உணவாய் தந்தாய்
உலகில் நான் வாழ
உருவம் நீ தந்தாய்...
உரு ஆக்கினாய் கருவில்
உருவாக்கினாய் உலகில் ...
உலகின்
அதிசயங்கள்
ஏழென்பர்
எட்டென்பர்..
எல்லா அதிசயமும்
எட்டாத அதிசயம்
எனக்கு நீ #அம்மா....
அன்பை சுமந்திடும்
#அன்னையர் அனைவருக்கும்
#அன்னையர்_தின வாழ்த்துக்கள்...
வாழ்த்துகளுடன்
உங்கள்
✍️ கவிஞர் விஜயநேத்ரன்