வெண்ணிற உடை அணிந்த அன்னப் பறவைகள்
கண்ணில் நலம் பேணும் காவியச் சிற்பங்கள்
அன்பை பொழிகின்ற அழகிய கவிதைகள்
அமைதியே உருவான அன்னை தெரசாக்கள்
தேய்பிறை போலே உடல் தேய்ந்து
நோய் தீண்டி தவித்திடும் உயிரதற்கு
சேயாய் போற்றிடும் சேவையினால் தினமும்
தாய்மையை வழங்கிடும் உன்னதத் தாய்மார்கள்
காலையோ மாலையோ கடும் பகலோ
கண் துயில் கொள்ளும் நெடு இரவோ
கண்விழித்து சேவை செய்து காத்திடுவர்
கடவுளைப் போல் கண்ணிற்கு தோன்றிடுவர்
வெட்டுக் காயமென்ன விடம் தீண்டலென்ன
தொட்டிட அஞ்சிடும் தொழு நோயுமென்ன
தொட்டு மருந்திடும் தூயவர் செவிலியர்கள்
தொழுதிடும் பணி செய்யும் தேவதைகள்
அன்பை விதைக்கும் அனைத்து செவிலியர்களுக்கும் செவிலியர் தின நல்வாழ்த்துகள்.
வாழ்த்துகளுடன்
✍ கவிஞர் விஜயநேத்ரன்