பத்மஸ்ரீ ஹரேக்கலா ஹஜ்ஜாபா : கல்விக் கண் திறந்த வள்ளல்
பணம் இருப்பவரிடம் மனம் இருப்பதில்லை.
மனம் இருப்பவரிடம் பணம் இருப்பதில்லை
இது கண்ணதாசன் வடித்த வரிகள்... காலமெல்லாம் ஒலிக்கும் செவியில்...
கோடிகோடியாய்க் கொட்டி கிடந்தாலும்,
கொடுக்கும் மனம் இருந்தால்தானே,
கிடைக்குமது வறியவர்க்கு...
ஆம்...
மனமது வேண்டும் கொடுப்பதற்கு...
மனமிருந்தால் போதுமா...
மனதிற்குள் கேள்வி எழலாம்??
நிச்சயமாக...
மனம் இருந்தால் மார்க்கம் பிறக்கும்..
மார்க்கம் பிறந்தால், கரங்கள் கொடுக்கும்..
அப்படித்தான் பிறந்துள்ளது...
ஐயா ஹரேக்கலா ஹஜ்ஜாபாவிற்கும்..
பிறந்தது என்னவோ,
படிப்பின் வாசமில்லாத
தட்சிணா கன்னடாவில்...
மங்களூர் சாலையில்,
பழங்களை விற்றார்,
வயிற்றுப் பிழைப்புக்கு..
வந்தவெள்ளையனொருவன்
வாங்கிய பழத்திற்கு,
விலையைக் கேட்டான்...
ஆங்கிலத்தில்...
ஆங்கிலம் தெரியாமல்
வியாபாரம் போனாலும்..
ஆழ்மனதில் உதித்தது,
அவருக்குள் போதிமரம்...
பழங்களை விற்று,
நிலமொன்று வாங்கினார்..
தன் கிராமத்தில்..
வாங்கிய நிலத்தில்,
பள்ளியொன்று தொடங்கினார்...
தானறியா படிப்பை,
மற்றவர் அறிவதற்கு..
பணத்தை எப்படி மறைக்கலாம்?
கல்வியை எப்படி விற்கலாமென
கணக்குப் போடுகின்ற,
பல்வாள்தேவன்களுக்கு மத்தியில்,
பாகுபாலியாய் உயர்ந்தார்...
நல்ல மனிதராய்...
ஆம்...
தனக்குக் கிடைக்காததை
மற்றவர்க்குக் கொடுப்பது
மாமனித குணமல்லவா...
நீரும் மாமனிதரே..
உம் கரங்களைக் சேர்ந்ததில்,
பெருமை கொள்கிறது...
#பத்மஸ்ரீ..
பத்மஸ்ரீ ஹரேக்கலா ஹஜ்ஜாபா!!!
கவியால் உம்மை வாழ்த்தி,
கால் தொட்டு வணங்குகிறேன்...
நீர் வாழ்க பல்லாண்டு...
வாழ்த்துக்களுடன்,
கவிஞர் விஜயநேத்ரன்