தீண்டத்தகாத தீபாவளிப் பட்டாசு
திருமண வரவேற்பிற்கு,
தேவைக்கதிமாக வெடிக்கலாம்...
வழியெங்கும் பட்டாசை...
அரசியல்வாதிகளின் வருகைக்கு
ஆர்ப்பரித்துக் கொண்டாடலாம்...
ஆயிரம் வாலாக்களை வெடித்து....
புத்தாண்டுக் கொண்டாட்டமென
புகைமூட்டத்தை உருவாக்கலாம்...
வான்வெளி வானவேடிக்கையில்...
ஆனால்,
தீபாவளிப் பட்டாசு மட்டும்,
தீண்டதகாதது ஆகிவிடுகிறது...
திடீரென முளைக்கிறார்கள்,
சூழலியல் ஆர்வலர்கள்...
காற்றை மாசாக்கும்,
காசைக் கரியாக்கும்,
வெடிகளைத் தவிர்ப்போமென்று
வேதம் ஓதுகிறார்கள்...
புத்தாண்டுப் பட்டாசுகள்
காற்றைச் சுத்தப்படுத்தி வைக்க,
தீபாவளிப் பட்டாசுகள் மட்டும்,
மாசாக்கி விடுகின்றன...
மண்ணிலுள்ள காற்றை...
நிமிடத்திற்கொரு முறை,
நிறுத்தாமல் புகைக்கும்,
சிகரெட்டை நிறுத்துங்கள்...
வசதியை பறைசாற்றும்
வானூர்தி எண்ணிக்கையை,
சற்றே குறையுங்கள்...
அரசியல் சாணக்கியத்திற்கு
அடிக்கடித் தீக்குளிக்கும்,
குடிசைகளை காப்பாற்றுங்கள்...
அவரவர் பகட்டிற்கும்,
ஆங்கிலப் பண்டிகைக்கும்,
விலையாகும் பட்டாசின்,
விற்பனையை நிறுத்துங்கள்...
அதை எல்லாம்,
புனிதமாக்கி விட்டு,
திபாவளிப் பட்டாசை மட்டும்
தீண்டதகாததை மாற்றுவதேனோ...
அளவாய் வெடிக்கட்டுமே...
அடிமட்டமும் கொஞ்சம் மகிழட்டும்...
உங்கள்
கவிஞர் விஜயநேத்ரன்