Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

மனிதம் வாழ்கிறது - மரங்களிலும் சிலர் மனங்களிலும்..

Copied!
Kavignar Vijayanethran

மனிதம் வாழ்கிறது மரங்களிலும் சிலர் மனங்களிலும்...

தேசம் விட்டு தேசம் சென்றாலும், 
கண்டம் விட்டு கண்டம் கடந்தாலும், 
மனித வாசனை இல்லாத, 
வானளவு உயரத்தை அடைந்தாலும், 
எங்கும் ஒலிக்கும்...
ஓங்கி உரத்த குரலிலும், 
ஓசையில்லா மௌனத்திலும்...
உதவியென்ற ஒன்று...

கேட்பதற்கு எளிதாய் இருந்தாலும், 
கிடைப்பதில்லை எளிதாய்...
எல்லோருக்கும்...

உதவியென்று கேட்டதும்
உள்ளுக்குள் முளைக்கிறது...
ஆயிரம் சிந்தனைகள்...

தெரிந்தவன்தானா என்று, 
அலசி ஆராய்கிறது,
அனுபவ ஆழ்மனது...

கைம்மாறு கிடைக்குமாயென 
கணக்கிடுகிறது...
கால்குலேட்டர் மூளை...

தர்மத்தின் பலனையெல்லாம்,
அறுவடைச் செய்யத்துடிக்கிறது..
ஆன்மீக ஆன்மா...

சாதியென்ன மதமென்ன, 
சாக்கடைக்குள் குளிக்கிறது..
அறிவிழந்த ஜந்து...

ஆனால்,
ஒன்று மட்டுமே...
ஒப்பற்ற நிதர்சனம்...

யாரோ ஒருவருக்கு, 
யாரோ ஒருவர், 
தெரிந்தோ தெரியாமலோ,
அறிந்தோ அறியாமலோ, 
உதவிக் கொண்டே இருக்கிறார்கள்...
எவ்வித பிரதிபலனையும்,
எதிர்பார்க்காமல்...
ஒவ்வொரு நொடியும்...

ஆம்...
மனிதம் வாழ்கிறது...
மரங்களிலும்...
சிலர் மனங்களிலும்...

அப்படி, 
வேரோடு வீழ்ந்தாலும், 
தோளோடு துணை நிற்கும்,
யாரோ ஒருவரால்தான்...
உலகம் சுழற்கிறது..
மனிதத்துடன் இன்றும்.....

முயன்றெதுவும் முடியாவிட்டாலும்,
இயன்றதை செய்வோம்...
இயலாதவர்க்கும்...
இல்லாதவர்க்கும்...

உங்கள், 
கவிஞர் விஜயநேத்ரன்


Copied!
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

போலி அறிவுரைகள் போதும்.... தூரம் செல்லுங்கள்

தீண்டத்தகாத தீபாவளிப் பட்டாசு

Copied!
கவிஞர் விஜயநேத்ரன்

நலம் பேணும் நாயகிகள் - செவிலியர்கள்

கவிஞர் விஜயநேத்ரன்

மனிதம் போற்றும் மனதிற்கு பிறந்தநாள் -கேப்டன் விஜயகாந்த் : பிறந்தநாள் பகிர்வு

கவிஞர் விஜயநேத்ரன்

வெற்றியின் வேர்களைத் தோல்வியில் கண்டறியுங்கள்

கவிஞர் விஜயநேத்ரன்

ஏம்மா - கவிஞர் புதியவன் வாழ்வின் வலி பேசும் புத்தகம்

கவிஞர் விஜயநேத்ரன்

மரங்களின் காதலன் விவேக்கிற்கு மனதால் ஒரு வாழ்த்து