நாம் அன்றாட வாழ்வில் நட்பு, காதல், சகோதரத்துவம் போன்று எண்ணற்ற உறவுகளை ஏற்படுத்திக் கொள்கிறோம். அதற்கான சுதந்திரத்தை நம் பெற்றோர்கள் நமக்கு கொடுத்திருக்கிறார்கள்.
எந்தவொரு உறவிலும் நாம் செய்யக் கூடிய தவறுகள் நம்மோடு முடிந்து விடுவதில்லை. அது எங்காவது எப்போதாவது சில நூறு நல்ல உறவுகளின் நிலையைக் கேள்விக் குறியாக்குகிறது. அது காதல், நட்பு , சகோதரத்துவம் எதுவாக இருந்தாலும் அந்த வலியை ஏதோ ஒரு வடிவத்தில் உணர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆதலால் எந்த ஒரு உறவாக இருந்தாலும் அதன் புனிதத்தைக் காப்பாற்றுங்கள்.
எங்கோ ஒரு சில போலியான உறவுகளால் தவறுகள் நடக்கின்றன. அதற்காக உண்மையான பந்தங்களை தயவு செய்து காயப்படுத்தாதீர்கள். போலியான பந்தங்களை மேற்கோள் காட்டி உண்மையான பந்தங்களை சிதைக்கும் போது அவர்களுக்குள் உண்டாகும் வலியை உங்களால் உணர முடியாது.
இதைப் பற்றிய ஒரு சிறு நாவலே இந்த படைப்பாகும்.. விருப்பம் உள்ளவர்கள் வாங்கிப் படியுங்கள்..
உங்கள்
கவிஞர் விஜயநேத்ரன்