அவனதிகாரம் - என்னவனுடன் ஒரு பயணம்
கனவின் தொடக்கம் பகுதி1
அன்புள்ள என்னவனே!!!
என் உள்ளக்கதவுகளை மெல்லத் திறந்து எழுதுகிறேன்...
உன்னை எண்ணி சிறு கடல்...
உனக்காக ஒரு மடல்....
கனவுகள் ஆயிரம் உண்டு
கன்னியர் உள்ளத்தில் என்றும்...
கனவாய் மாறும் பலருக்கு...
கைகளில் கூடும் சிலருக்கு....
நாணி சிவக்கும் நினைவினை
நான் சுமக்கும் கனவினை
உனக்காக இங்கே திறக்கிறேன்...
என் உள்ளக் கதவுகளை...
நீ உணர்வாய் என்ற நம்பிக்கையில்...
எப்படி இருக்க வேண்டும்
உன் வருங்காலக் கணவன்
பார்ப்பவர் எல்லாம் கேட்கிறார்கள்..
பதிலாய் எழுதுகிறேன்..
நீயும் கேட்டுக்கொள்..
ஆறடி உயரம் தேவையில்லை
ஆஜானுத் தோற்றத்தில் விருப்புமில்லை...
கருப்போ சிவப்போ பேதமில்லை...
அதில் கருத்து மோதல் எனக்குயில்லை...
சம்பளம் பற்றிக் கவலையில்லை
அந்த சங்கடம் எனக்கு என்றுமில்லை...
அரண்மனை நானும் கேட்கவில்லை..
பிறன்மனை நோக்கும் எண்ணமில்லை..
கட்டுடல் மேனியில் கனவுமில்லை..
காதலைத் தாண்டி ஏதுமில்லை..
உன்னை உயிரில் சுமக்குமென்
உள்ளக் காதலுக்குள் கட்டுண்டு
என் உணர்வுக்கு மதிப்பளித்து
என்னில் சரிபாதியாய் என்றும்
நொடியும் குறையாது
நினைவில் விலகாது
கனவில் பிரியாது
உன்னோடு நானும்
என்னோடு நீயும்...
நம்மோடு நம்காதலும்....
இருந்தால் போதும்....
அப்படி மட்டும் நீ இருந்தால்,
எப்படி வாழவேண்டும் தெரியுமா..
உன்னுடன்.
இதுதான் நம் வாழ்க்கை...
இது போலொரு வாழ்க்கையை
இருவரும் வாழ வேண்டும்....
இதயத்தால் வாழ வேண்டும்....
வெற்றி தோல்விகள் மாறி மாறி வந்தாலும்
நான் பற்றிடும் கரங்கள் உனதாக இருக்க வேண்டும்...
நான் விழும் போதெல்லாம்
எனக்காக ஒலிக்கும் குரல்
உன்னுடையதாக இருக்க வேண்டும்...
" நான் இருக்கின்றேன் உனக்காக " என்று....
நான் அழும் போதெல்லாம்
எனக்காக நீளும் கரம்
உன்னுடையதாய் இருக்க வேண்டும்...
"நான் இருக்கிறேன் உனக்காக" என்று ...
உன் விருப்பங்கள் எனதாக வேண்டும்
என் விருப்பங்கள் உனதாக வேண்டும்...
நம் விருப்பங்கள் நிறைவேற வேண்டும்...
என் மீதான உன் காதலும்
உன் மீதான என் காதலும்
தினம் நீள வேண்டும்...
என் வெற்றி மாலைகளை நீ சூட வேண்டும்....
என் நெற்றி மீதிலே உன் முத்தம் வேண்டும்....
என்னை சுற்றி எத்தனை பேர் இருந்தாலும்
என்னவள் என்று பெருமையாய்
உன் பெயர் சொல்ல வேண்டும்....
இப்பொழுதும்...
எப்பொழுதும்...
முப்பொழுதும்....
நீ தானடா...
நீ மட்டும் தானடா...
என் வாழ்க்கை....
கனவுகள் தொடரும்..
✍️ கவிஞர் விஜயநேத்ரன்