Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

சர்வதேச ஆண்கள் தினம் : கண்ணீர் ஒன்றும் கன்னியரின் சொத்தல்ல

Copied!
Kavignar Vijayanethran

சர்வதேச ஆண்கள் தினம் : கண்ணீர் ஒன்றும் கன்னியரின் சொத்தல்ல...

கண்ணீர் ஒன்றும் கன்னியரின் சொத்தல்ல...

ஆண்களுக்கும் உரிமை உண்டு...

அழுவதற்கு... 

பார்ப்பதற்கும் படிப்பதற்கும் வெகு சாதாரணமாக இருந்தாலும், அதற்கு பின்னால் இருக்கும் வலி மிகப்பெரியது.

நகை, அழுகை, இளிவரல், மருட்கை , அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, அமைதி என்னும் நவரசங்களுக்குள் மனித உணர்வுகளை அடக்கிவிடலாம். ஆனால் நகைப்பையும் கண்ணீரையும் பிரித்தெடுத்து ஆண்களுக்கு நகைப்பும், பெண்களுக்கு கண்ணீரையும் பிறவி சொத்தாக மாற்றி இருக்கிறது நம் வாழ்வியல்.  பெண் சத்தமாக சிரிப்பதும், ஆண் உடைந்து அழுவதும் பெரும் தவறென்று  வாழையடி வாழையாக கற்பிதம் செய்து நம் மனதில் ஆழப் பதித்து விட்டார்கள். 

பெரும்பான்மை சமூகம் எப்படி ஒரு பெண்ணின் மகிழ்ச்சிக்கு கட்டுப்பாடுகள் விதித்து, வரையறைக்குள் அடைத்து, அதை வெளிப்படுத்த முடியாமல் சிறை வைக்க எண்ணுகிறதோ, அதே போலொரு நிலைமைதான் ஆண் சுமக்கும் வேதனைகளுக்கும், வலிகளுக்கும் இங்கே  இருக்கிறது. 

ஆணென்பவன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தனது வலியை வெளிப்படுத்தவோ, கண்ணீர் வடிக்கவோ உண்டான சுதந்திரம் அவனுக்கு எப்போதும் கிடைப்பதில்லை. அதற்கான சூழ்நிலை தனிமையில் மட்டுமே கிடைக்கிறது. இதயத்தில் சுமக்கும் வலிகளின் ரணத்தை யாருக்கும் தெரியாமல் கண்ணீராய் இறக்கி வைத்துவிட்டு, புன்னகையுடன் வெளிவருகிறான். 

காதல் வயப்படும் தருணங்களில் கூட இதன் தன்மை வெளிப்படுகிறது. ஒரு பெண் எதிர்பார்ப்பது தனக்குத் துணையாக, தன்னுடைய கனவுகளுக்கு உறுதுணையாக இருப்பவனையே விரும்புகிறது.அதனால்தான் பெரும்பாலான பெண்களுக்கு தன்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் ஆண் மகனை எளிதாகப் பிடிக்கிறது. ஆனால் ஒரு ஆண்,  எப்போதும் ஆறுதலையே அதிகம் எதிர்பார்க்கிறான்.  வெளியில் கிடைக்காத, யாரும் கண்டறியாத அவன் வலிகளுக்கு மருந்திடும் பெண்ணிடம் எளிதில் ஒரு ஆண் தன் மனதை இழந்துவிடுறான் என்பதே உளவியல் ரீதியான உண்மையாகும். 

ஒரு ஆண் கண்ணீர் சிந்தினால் அவனை ஆண்மகனாகப் பார்க்கவே இந்த சமூகம் யோசிக்கிறது. " ஏன்? பொம்பள மாதிரி அழுதிட்டு இருக்க" என்று கண்ணீரை  பெண் பிள்ளைகளுக்கு மட்டுமே உரித்தானது என்று சித்தரிப்பை உடைக்க வேண்டியது  இங்கே முக்கியமான ஒன்றாகிவிடுகிறது. ஏனென்றால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தாமல் இருந்தால் கூட பெரிதாய் ஏதும் நிகழ்வதில்லை. ஆனால் உள்ளத்தின் வலிதனை உள்ளுக்குள் புதைத்துக் கொள்வது, மன அழுத்தத்தை அதிகரிக்கும். மனஅழுத்தம் அதிகமாகும் போது, அதன் விளைவுகள் மிக மோசமானதாகி விடும்.

பொதுவாக ஒருவரை எவ்வாறு உங்கள் கனவுகளை நோக்கி செல்லுங்கள், உங்களை மகிழ்ச்சியாக்கும் செயல்களை செய்யுங்கள் என்று எவ்வாறு ஊக்கப்படுத்துகிறோமோ, அதே போல் அழ வேண்டும் என்று தோன்றினால் அழுது விடுங்கள்.  அழுவது உங்கள் வலியைக் குறைத்து  மனதை இலகுவாகக்கும் என்றால் அழுங்கள். சுற்றிலும் யார் இருந்தால் என்ன? என்ன நினைத்தால் என்ன?. உங்களின் மனதை இலகுவாக்க, கண்ணீர் ஒரு காரணி என்றால், அதைச் செய்வதே ஒன்றும் தேசத்துரோகம் அல்ல.

இன்பமோ, துன்பமோ, கண்ணீரோ, உற்சாகமோ எதுவாக இருந்தாலும் அது ஆணுக்கோ, பெண்ணுக்கோ யாருக்கும் தனியானது இல்லை. அது மனித உணர்வின் வெளிப்பாடு. அதை வெளிப்படுத்த மனிதனாய் இருந்தால் போதும்.  உங்கள் உணர்வுகளுக்கு எவ்வாறு மற்றவர்கள் மதிப்பளிக்க வேண்டும் எண்ணுகிறீர்களோ, அதைப்போல மற்றவர் உணர்வகளுக்கும் நீங்கள் மதிப்பளியுங்கள்.. ஏனென்றால், இந்த மனித வாழ்க்கை உணர்வு பின்னல்களின் சங்கிலித் தொடரே..

ஆண்மகன்கள் அனைவருக்கும் உலக ஆடவர் தின நல்வாழ்த்துகள்...


Copied!
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

இனியேனும் வருமா ??- விதி மாற்றும் நீதி ; Justice for PonTharani

தலைக்குப் பொருந்தாத கீரிடம்

Copied!
கவிஞர் விஜயநேத்ரன்

ஏட்டில் உள்ள சமத்துவம் எண்ணத்தில் எப்போது வரும் : ஜெய் பீம் - ஒரு மனித சுயபரிசோதனை

கவிஞர் விஜயநேத்ரன்

உள்ளத்தால் வாழ்வோம் : உனக்கும் கீழே உள்ளவர் கோடி

கவிஞர் விஜயநேத்ரன்

நவராத்திரி : பேரரக்க மனதழித்து பெண்மையைப் போற்றுவோம்!!!!

கவிஞர் விஜயநேத்ரன்

சமூகநீதி போதித்த சாதனையாளர் : தந்தைப் பெரியார்

கவிஞர் விஜயநேத்ரன்

சென்னை : இது வெறும் ஊரல்ல... உணர்வுகளின் சங்கமம்