இளநெஞ்சுக்குள் எத்தனை வலியோ?
அவள் விதியினில் ஏனிந்த பிழையோ??
தவறதைச் செய்தவரெல்லாம்
தலைகுனிவின்றி நடப்பது முறையோ??
கனவுகள் சுமந்தவள் நெஞ்சம்
கானலாய்த் தொலைந்ததே இன்று..
தூக்கினில் தொங்கிடுமுன்னே
துடித்தே மரித்தது நெஞ்சம்..
பேருந்து பயணமென்று
பேசாமல் இருந்துவிட
அறிவுரை கூறுவது
ஆசானுக்குத் தகுமோ??
புல்லுருவிக் கூட்டமும்
நெல்லென்று ஆகிடுமோ??
ஆசிரியர் மகத்துவத்தின்
அரிச்சுவடை மாற்றிடுமோ??
எழுத்தறிவிப்பவன் இறைவென்று
எண்ணத்தில் இருக்கும்போது,
ஏனிந்த இழிநிலையோ??
எண்ணத்தில் ஏன் பிழையோ??
உம் பிள்ளை வந்தாலும்
இப்படித்தான் நடப்பீரோ??
உண்மையை மறைத்தங்கு
ஊமையாய் நிற்பீரோ???..
பெண்ணாக இருந்தும்கூட,
பெண்மகளின் வலியதனை,
உன்னிலையில் உணராமல்,
அவள் உயிரை பறித்தாயே??..
பெண்ணவளின் உயிரைவிட,
நற்பெயர் தான் பெரிதுனக்கோ???..
சாக்கடைகள் உள்ளிருக்க,
சந்தனம்தான் மனந்திடுமோ???..
பார்வைக்கு வந்தபின்னும்,
கடமையை மற்ந்திட்ட,
தலைமைக்கும் தண்டனைகள்,
தரவேண்டும் நிச்சயமாய்....
இனியேனும் கிடைத்திடுமா
விரைவாக ஒரு நீதி...
ஒரு குரலாக ஒலிப்பாயே!!!
தருவாய் நல் நீதி!!!
#JusticeForPontharani