Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

உள்ளத்தால் வாழ்வோம் : உனக்கும் கீழே உள்ளவர் கோடி

Copied!
Kavignar Vijayanethran

உள்ளத்தால் வாழ்வோம் - உனக்கும் கீழே உள்ளவர் கோடி

இறுதிமூச்சிருக்கும் வரை 
வாழ்ந்து தான் ஆக வேண்டும்....
இங்கே..

இழப்புகளைத் தாண்டியும்,
வாழ்க்கை இருக்கிறது...
ஒவ்வொருவருக்கும்...

மனதிற்குள் தோன்றலாம்...
மாபெரும் இழப்பெல்லாம்
நமக்குத்தானென்று...

உலகெல்லாம் இருளாக்கும்,
கண்மூடிய பூனைக்கு, 
விடுதலை கொடுங்கள்..

"நமக்கும் கீழே உள்ளவர் கோடி
கண்ணதாசன் வரிகளெல்லாம், 
கண்ணெதிரில் தென்படலாம்..

சர்வதேச விருது பெற்று , 
சுற்றி வலம் வருகிறது 
சமூக வலைதளத்தில்..

சீர்குலைந்த சிரியாவை, 
சிந்தைக்குள் நிறுத்துவதாய்..
ஒற்றைப் புகைப்படம்...

கண்ணிவெடித் தாக்குதலில், 
கால்கள் இழந்த தந்தை...
தூக்கிக் கொஞ்சுகிறார்...
தன் அன்புக் குழந்தையை..

பிஞ்சுக் குழந்தையையும், 
பிய்த்து எறிந்திருக்கிறது..
கருவிலேயே..

இடுப்புக்கு கீழே, 
கால்களை இழந்து தான், 
அடிவைத்திருக்கிறது...
அன்னை பூமியில்...

இருந்தாலும், 
புன்னகைக்கிறார்கள்...
இருவரும்...

இப்படித்தான் நாமும், 
இழப்புகள் அதிகம் இருந்தாலும்,
இதயத்தில் வலிகள் நிறைந்தாலும், 
இதழில் புன்னகையோடு நடப்போம்...
இன்னலை நம்பிக்கையோடு கடப்போம்..

நம்பிக்கையுடன் நகர்வோம்...
நாளைய விடியலுக்காக...

உங்கள், 
கவிஞர் விஜயநேத்ரன்...

Copied!
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

நவராத்திரி : பேரரக்க மனதழித்து பெண்மையைப் போற்றுவோம்!!!!

ஏட்டில் உள்ள சமத்துவம் எண்ணத்தில் எப்போது வரும் : ஜெய் பீம் - ஒரு மனித சுயபரிசோதனை

Copied!

தவறு சட்டத்தில் இல்லை; அதைப் பயன்படுத்தும் விதத்தில்தான்- என்னங்க சார் உங்க சட்டம்

கவிஞர் விஜயநேத்ரன்

ஏட்டில் உள்ள சமத்துவம் எண்ணத்தில் எப்போது வரும் : ஜெய் பீம் - ஒரு மனித சுயபரிசோதனை

கவிஞர் விஜயநேத்ரன்

நவராத்திரி : பேரரக்க மனதழித்து பெண்மையைப் போற்றுவோம்!!!!

கவிஞர் விஜயநேத்ரன்

சமூகநீதி போதித்த சாதனையாளர் : தந்தைப் பெரியார்

கவிஞர் விஜயநேத்ரன்

சென்னை : இது வெறும் ஊரல்ல... உணர்வுகளின் சங்கமம்